News November 11, 2024
நீலகிரி: ஆபத்தை மீறி அணை நீரில் ‘பைக்’ சவாரி

எமரால்டு அணையில் இருந்து தினசரி ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. எனவே, ஆற்றோரம் செல்லவோ, அணை நீர் செல்லும் சாலையை வாகனங்கள் மூலம் கடக்கவோ கூடாது என்றும் நீலகிரி மாவட்ட நிர்வாகம் எச்சரித்து வருகிறது. இந்த நிலையில் ஆர்வ கோளாறினால் ஆபத்தை உணராமல் சிலர் இரு சக்கர வாகனத்தில் அணை நீரில் கடந்து செல்வது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News August 14, 2025
நீலகிரி: இ-நாம் திட்டத்தில் கலெக்டர் அறிவிப்பு!

நீலகிரி மக்களே விவசாய விளை பொருள்களை விற்க ‘இ-நாம்’ திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதனால் விவசாய விளை பொருள்களை கொண்டு செல்வதற்கு செலவு குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் அனைவரும் இந்த ஒழுங்குமுறை விற்பனை கூட அலுவலரை அணுகி, ‘இ-நாம் மற்றும் பண்ணை வாயிலாக உற்பத்தி செய்யும் வேளாண் விளை பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்து பயனடையலாம். என நீலகிரி ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News August 14, 2025
இ-நாம்’ செயலி வாயிலாக விற்பனை செய்ய அழைப்பு!

குன்னுார், ஊட்டி ஆகிய பகுதிகளில் இரு ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில், ‘இ-நாம்’ திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இந்த முறையில் ஏல நடைமுறைகள் அனைத்தும் மின்னணு முறையில் இணையதளம் வாயிலாக மேற்கொள்ளப்படும். மாவட்ட கலெக்டர் கூறுகையில், விவசாயிகள் அனைவரும் இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடங்களை அணுகி, ‘இ-நாம் மற்றும் பண்ணை வாயில் வணிகம்’ வாயிலாக உற்பத்தி செய்யும் வேளாண் விளை பொருட்களை அதிக விலைக்கு விற்கலாம்.
News August 14, 2025
தகவல் அறியும் உரிமை சட்டம் விழிப்புணர்வு கூட்டம்

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தகவல் அறியும் உரிமை சட்டம் 2005-யின் கீழ், மாநில தகவல் ஆணையர்கள் ஆர்.பிரியகுமார் வி.பி.இளம்பரிதி, .எம்.நடேசன், ஆகியோர் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., முன்னிலையில், நேற்று அனைத்து துறை அலுவலர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்