News January 21, 2026

நீலகிரி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

நீலகிரி மாவட்டம் பிங்கர் போஸ்ட் அருகில் உள்ள கூடுதல் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், வரும் 23ஆம் (வெள்ளிக்கிழமை ) தேதி காலை 11:30 மணியளவில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரூ அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. நீலகிரி மாவட்ட விவசாயிகள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின் முகாமில் கலந்துகொண்டு தெரிவிக்கலாம்.

Similar News

News January 25, 2026

நீலகிரியில் உச்சகட்ட பாதுகாப்பு!

image

குடியரசு தின விழாவை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் 500 போலீசார் ஈடுபட்டுள்ளனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. மாவட்ட எல்லைகள், லாட்ஜ் காட்டேஜ்களில் தீவிர சோதனை நடைபெற்ற வருகிறது. மேலும் வழிபாட்டுத்தலங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இவர்கள் நாளை வரை பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபடுவர்.

News January 25, 2026

நீலகிரி: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

image

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், நீலகிரி மாவட்ட மக்கள் 04232443962 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

News January 25, 2026

நீலகிரி மக்களே இதை தெரிஞ்சிக்கோங்க!

image

சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது இன்று பலரின் கனவாக உள்ளது. அவ்வாறு வாங்கும் நிலத்தின் மீது ஏதாவது நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பலருக்கும் சவாலாக உள்ளது. ஆனால், அந்த கவலை இனி வேண்டாம். <>clip.tn.gov.in <<>>என்ற இணையதளத்தில் நிலத்தின் சர்வே நம்பர் கொடுத்து உங்களுக்கு தேவையான தரவுகளை தெரிந்து கொள்ளலாம். இந்த தகவலை உங்களுடைய நண்பர்களுக்கும் SHARE செய்யுங்கள்.

error: Content is protected !!