News February 2, 2026

நீலகிரி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!

image

நீலகிரி: மசினகுடி அருகே மாயர் கிராமத்தை சேர்ந்த பாப்பம்மாள் என்பவருக்கு, அவர் இறந்துவிட்டதாக தவறாக பதிவானதால் கடந்த 6 மாதங்களாக ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது. “நான் உயிருடன் தான் இருக்கிறேன், நான் இறக்கவில்லை” என தெரிவித்த அவர், ஆவணங்களில் தவறான விவரங்களை திருத்தி, நிறுத்தப்பட்ட ஓய்வூதியத்தை மீண்டும் வழங்க வேண்டும் என ஆட்சியர் அலுவலகத்தில் வலியுறுத்தியுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Similar News

News February 16, 2026

நீலகிரி: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

image

நீலகிரி மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <>இங்கு க்ளிக்<<>> செய்து எந்த நிறுவனம் (Bharatgas, indane, HP) என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், IFSC கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் போதும், மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் வந்துவிடும். இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News February 16, 2026

ஊட்டியில் திடீர் ஆய்வு

image

நீலகிரி மாவட்டத்தில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த மாலை ரயில் சேவை இயங்கி வருகிறது. நேற்று குன்னூர் மற்றும் ஊட்டி ரயில் நிலையங்களில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர் என் சிங் ஆய்வு மேற்கொண்டார். ரயில்வே ஊழியர்கள் ஆள்பற்றகுறை உட்பட்ட பல்வேறு கோரிக்கைகளை வழங்கினர். இவருடன் சேலம் கோட்ட பொது மேலாளர் பன்னாலால் உட்பட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

News February 16, 2026

நீலகிரி: இரவு ரோந்து பணி அதிகாரிகள் விபரம்

image

நீலகிரி மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!