News September 16, 2025
நீலகிரி ஆட்சியர் அதிரடி நடவடிக்கை!

நீலகிரி மாவட்டம், சீகூர் பள்ளத்தாக்கில், மாயார், சோலுார் உள்ளிட்ட பகுதிகள் யானை வழித்தடமாக உள்ளன. சீகூர் யானை வழித்தடத்தில் சீல் வைக்கப்பட்ட விடுதிகளை, இடித்து அகற்ற தற்போது, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. நீலகிரி கலெக்டர் லட்சுமி பவ்யா கூறுகையில், ”யானைகள் வழித்தடத்தில் உள்ள, 39 தங்கும் விடுதிகளை விரைவில், இடிக்கபடும். யானைகள் வழித்தடம் குறித்து, டிஜிட்டல் வரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது,” என்றார்.
Similar News
News September 16, 2025
நீலகிரி: ஆவினில் பணி புரிய அரிய வாய்ப்பு!

▶️தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் இலவச ‘பால் கணக்கெடுப்பு, அக்கவுண்டிங்’ பயிற்சி வழங்கப்படுகிறது. ▶️20 நாட்கள் நடைபெறும் இந்தப் பயிற்சியில் தினசரி பால் கணக்கீடு, கலெக்ஷன், நிர்வாகம் உள்ளிட்டவை சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படும். ▶️இதில் பயிற்சி பெற்றால் ஆவின் நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பை பெறலாம். இதற்கு விண்ணப்பிக்க <
News September 16, 2025
நீலகிரி: பொதுக்கூட்டத்தில் நுழைந்ததால் பரபரப்பு!

குன்னூரில் நேற்று நடந்த அ.தி.மு.க., பொதுக்கூட்டத்தில் பேசிய சிலர், நகராட்சியில் நடக்கும் தி.மு.க., ஊழல் குறித்தும், அரசு கொறடாவையும் விமர்சித்து பேசியுள்ளனர். அப்போது கோபமான, மாவட்ட செயலாளர் ராஜூ ஆதரவாளர்கள் செல்வம், கோவர்த்தனன், பாரூக் உட்பட திமுகவினர் சிலர், அதிமுகவினரின் பொதுக்கூட்டத்திற்கு சென்று, ஒலிபெருக்கியை நிறுத்துமாறு, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் தடுத்து அனுப்பி வைத்தனர்.
News September 16, 2025
கூடலூர்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு

2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பாளர்களை அறிவித்து வருகிறார். இதில் கூடலூர் சட்டமன்ற தொகுதிக்காக கட்சியின் தகவல் தொழில்நுட்ப பாசறை மாநில துணை செயலாளர் கார்த்திக் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு சகா கட்சித் தோழர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.