News September 28, 2025

நீலகிரி அருகே 2 பஸ்கள் மோதி பயங்கர விபத்து

image

கூடலூரில் இருந்து ஊட்டிக்குச் சென்ற கேரளா சுற்றுலா பேருந்து மற்றும் மைசூருக்குச் சென்ற கர்நாடகா அரசு பேருந்து தவளமலை பகுதியில் நேருக்கு நேர் மோதி 2 பஸ்களும் சேதமடைந்தன. விபத்து காரணமாக ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து நடவடிக்கை மேற்கொண்டு போக்குவரத்தை சீர்செய்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

Similar News

News January 27, 2026

கோத்தகிரியில் சோகம்

image

கோத்தகிரி அருகே உள்ள பில்லி கம்பை கிராமத்தை சேர்ந்த தன்ராஜ் (50 சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். அவர் நேற்று முன்தினம் ஊட்டிக்கு சென்ற போது திடீரென மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் சேர்த்ததில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த தன்ராஜின் தாய் மிச்சியம்மாள் சோகம் தாளாமல் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.

News January 27, 2026

நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்

image

நீலகிரி மாவட்டம் உதகை அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அவர், சிறப்பாகப் பணியாற்றிய அரசு அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.

News January 26, 2026

தொட்டபெட்டா ஊராட்சியில் கிராம சபா: கலெக்டர் பங்கேற்பு

image

நீலகிரி மாவட்டம், உதகை ஊராட்சி ஒன்றியம், தொட்டபெட்டா ஊராட்சி அலுவலகம் ஆடாசோலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின் மக்களின் மனுக்கள் குறித்த குறைகளை கேட்டு அறிந்து, விரைவில் மனுக்கள் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார்.

error: Content is protected !!