News September 14, 2025
நீலகிரி: அரசு சேவைகளை எளிதாக பெற கிளிக்!

அரசு திட்டங்களுக்கு தனித் தனி இணைய தளங்கள் உள்ளன. ஏதேனும் சேவை பெற இதில் விண்ணப்பித்து அத்தாட்சியுடன் அணுகினால் வேலை உடனடியாக முடியும்.
பதிவுத்துறை: https://tnreginet.gov.in/portal/index.jsp
பொது விநியோகம்: https://tnpds.gov.in/
உழவர் நலத்துறை: https://www.tnagrisnet.tn.gov.in/home/schemes/
மற்ற தளங்களை அறிய: <
Similar News
News September 14, 2025
நீலகிரி: சாலையோர கடைகள் அகற்ற உத்தரவு!

நீலகிரி மாவட்டம் குன்னூர் உழவர் சந்தை செல்லும் சாலையில் தற்போது சாலை பணிகள் நடைபெற்று வருவதால், இங்கு செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. மேலும் இச்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள சாலையோர கடைகளை இரண்டு நாட்களில் அகற்ற வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
News September 14, 2025
நீலகிரி: ரூ.30000 சம்பளம் நபார்டு வங்கியில் வேலை!

தமிழக நபார்டு வங்கி நிதிச்சேவை நிறுவனத்தில் காலியாக உள்ள கஸ்டமர் சர்வீஸ் ஆப்பீஸர் பணிக்கு ஆட்தேர்வு நடக்கிறது. காலிப்பணியிடங்களுக்கு நேர்காணல் நடக்கிறது. படிப்பு 12th போதும். 18 வயது முதல் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.30000 வரை. கடைசி தேதி: செப்.27. விண்ணப்பக் கட்டணம் இல்லை. மேலும், விவரம் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கு<
News September 14, 2025
நீலகிரியில் முதியவரை தாக்கிய யானை!

நீலகிரி கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகம், கார்குடி சரக எல்லைக்குட்பட்ட தெப்பக்காடு தேக்குபாடி பகுதியில் வசிப்பவர் மதன்குமார் (80). இன்று விடியற்காலை 3:30 மணிக்கு சிறுநீர் கழிக்க வீட்டிற்கு வெளியே சென்ற போது, யானை தாக்கியதில் காயமடைந்தார். அவரை உடனடியாக கார்குடி வனவர் மற்றும் ஊர் மக்கள் உதவியுடன் அவரை மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.