News April 13, 2024
நீலகிரி: அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் உஷ்ணம் அதிகமாக இருந்தது. இதை தொடர்ந்து நேற்று நீலகிரியில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. இதனால் அனல்காற்று வீசியதால் வாகன ஓட்டிகள், கடும் அவதிப்பட்டனர். இந்நிலையில் தமிழகத்தில் நீலகிரி உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு இன்று மாலை 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News November 10, 2025
நீலகிரி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

நீலகிரி மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News November 10, 2025
நீலகிரி மக்களே.. 2 நாட்கள் எச்சரிக்கை!

நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக உதகை, குன்னூர், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் வரும் நவ.12,13 ஆகிய 2 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. எனவே, மக்களே வெளியில் செல்லும்போது குடையுடன் போங்க. இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News November 10, 2025
நீலகிரியில் பெரும் அச்சத்தில் மக்கள்!

நீலகிரி மாவட்டம், தேவர்சோலை பேரூராட்சி, மாணிக்கலாடி பகுதியில் வசிக்கும் ஹரிதாஸ் என்பவரின் பசுமாடு, அவர் வீட்டின் அருகே இருந்த ஒரு தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு மறைந்திருந்த புலி, அந்த பசுவை அடித்து கொன்றது. இச்சம்பவத்தால், இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


