News May 2, 2024

நீலகிரியில் 38 நிறுவனம் மீது நடவடிக்கை

image

நீலகிரியில் தொழிலாளர்களுக்கு மே தினத்தன்று விடுமுறை அல்லது இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் என குன்னூர் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் முருகேசன் உத்தரவிட்டு இருந்தார். இந்நிலையில். குன்னூர். ஊட்டி, கூடலூர், கோத்தகிரி பகுதிகளில் இயங்கும் 38 நிறுவனங்கள் விதி மீறி செயல்பட்டது தெரியவந்தது. அந்த 38 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 20, 2024

நீலகிரி: 346 பேர் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி

image

நீலகிரி மாவட்டத்தில் நடந்த கலை திருவிழாவில் திறமைகளை வெளிப்படுத்திய 346 மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ளனர். 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வர்ணம் தீட்டுதல், திருக்குறள் ஒப்பிவித்தல், நாட்டுப்புற நடனம், பறை இசைத்தல் உள்ளிட்ட 84 வகை போட்டிகள் உள்ளன. வட்டார, மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் வென்ற மாணவர்கள் தற்போது மாநிலப் போட்டிக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.

News November 20, 2024

நீலகிரி பழங்குடியினரை சந்திக்கும் ஜனாதிபதி

image

வரும் 27ஆம் தேதி கோவை சூலூர் விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஊட்டி ராஜ்பவன் வருகிறார். அன்றைய தினம் ஓய்வு எடுக்கிறார். நவ.28ஆம் தேதி குன்னூர் வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் நடக்கும் நிகழ்வில் பங்கேற்கிறார். 29ஆம் தேதி ராஜ்பவனில் நீலகிரி பழங்குடியின மக்களை சந்திக்கிறார்.

News November 19, 2024

நீலகிரி தலைப்பு செய்திகள்

image

1.நீலகிரி மாவட்டத்தில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் 107வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
2.கூட்டுறவு வார விழாவில் அரசு கொறடா பங்கேற்பு
3.நீலகிரியில் வன விலங்கு கணக்கெடுப்பு தொடக்கம்
4.ஊட்டியில் வீடு கட்டி தருவதாக ரூ.1.50 கோடி மோசடி
5. ஜனாதிபதி வருகை முன்னேற்பாடு குறித்து ஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம்