News January 10, 2026
நீலகிரியில் 2 நாள்கள் மதுக்கடை மூடல்! அதிரடி உத்தரவு

நீலகிரியில் ஹெத்தையம்மன் திருவிழா நடந்து வருகிறது. இவ்விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் கட்டபெட்டு ஒன்னதலை இடையே, பங்களோரை சின்னிஸ் கட்டடம் அருகே சாலை ஓரத்தில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. தற்போது, இத்திருவிழாவில் திரளானோர் பங்கேற்கவுள்ளதால் இன்று (ஜன.10), நாளை (ஜன.11) மதுக்கடை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
Similar News
News January 28, 2026
பந்தலூர் அருகே பாம்பால் பரபரப்பு

பந்தலூர், அய்யங்கொல்லி பிரதான சாலையில் கொடிய விஷமுள்ள நாகபாம்பு ஒன்று படம் எடுத்து நின்றது. இதனால் அச்சமடைந்த வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தியதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த வனத்துறையினர், லாவகமாகப் பாம்பைப் பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர். அதன் பின்னரே போக்குவரத்து சீரானது.
News January 28, 2026
நீலகிரி இரவு ரோந்து பணி விபரம்!

நீலகிரி மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.