News August 2, 2024
நீலகிரியில் 1,12,750 மகளிருக்கு உரிமைத் தொகை

நீலகிரி ஆட்சியர் லட்சுமி திவ்யா தண்ணீரு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் குன்னூர் வட்டத்தில் 19,332 பேர், கூடலூரில் 22,950 பேர், கோத்தகிரியில் 16,263 பேர், குந்தாவில் 6,718 பேர், பந்தலூரில் 20,019 பேர், உதகையில் 27,468 என மொத்தம் 1,12,750 மகளிருக்கு மாதம் ரூ.1000 உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News October 29, 2025
நீலகிரி: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

நீலகிரி மாவட்டத்தில் இன்று (28.10.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் குறித்த விவரம் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஊட்டி நகரம், ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் வழங்கப்பட்டுள்ளது.
News October 28, 2025
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 2025 ஆம் ஆண்டில் காந்தியடிகள், நேரு ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு, பள்ளி கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு நவம்பர் 4,5 ஆகிய தேதிகளில் ஊட்டி சிஎஸ்ஐ சிஎம்எம் மேல்நிலைப் பள்ளியில் பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ரூ.5000, 3000, 2000 மற்றும் சிறப்பு பரிசு வழங்கப்படுகிறது.
News October 28, 2025
நீலகிரி: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்

இ-சேவை மையம் தொடங்க விருப்பமா? அதற்கு முதலில், <


