News April 22, 2025
நீலகிரியில் வேலைவாய்ப்பு முகாம்

நீலகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையம் மூலமாக, தனியார் நிறுவனங்களில் பணிபுரிவதற்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், வரும் 25.04.2025 அன்று காலை 10 மணி முதல், உதகையில் உள்ள, மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில் நெறிவழிகாட்டும் மைய வளாகத்தில் நடைபெற உள்ளது. 10, 12, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் கலந்து கொள்ளவும். ஷேர் பண்ணுங்க.
Similar News
News January 1, 2026
நீலகிரி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

நீலகிரி மலை ரயில் அதிகாரிகள் தெரிவிக்கையில் விடுமுறைகளை முன்னிட்டு ஜனவரி மாதம் 2, 4, 15, 17, 23, 25 ஆகிய தேதிகளிலும் சிறப்பு மலை ரயில் இயக்கப்படுகிறது.இந்த சிறப்பு மலை ரயில் காலை 9.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு மதியம் 2.25 மணிக்கு ஊட்டி வந்து சேரும். அதேபோல் அடுத்த நாள் ஊட்டியில் இருந்து காலை 11.25 மணிக்கு புறப்பட்டு, மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையத்தை ரயில் சென்றடையும்.
News January 1, 2026
நீலகிரி: கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்றனுமா?

உங்களது இடம் (அ) வீடு கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற இங்கு<
1.கூட்டு பட்டா,
2.விற்பனை சான்றிதழ்,
3.நில வரைபடம்,
4.சொத்து வரி ரசீது,
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். (SHARE)
News January 1, 2026
BREAKING: நீலகிரி கலெக்டர் அதிரடி உத்தரவு

கேரள மாநிலத்தில் பறவை காய்ச்சல் பரவி உள்ளதால், நீலகிரி மாவட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நீலகிரி ஆட்சியர் தெரிவிக்கையில் பறவை காய்ச்சல் நோய்க்கு, சிகிச்சை அல்லது தடுப்பு மருந்து தற்போது இல்லை என்பதால், கேரளா மாநிலத்தில் இருந்து கோழிகள், முட்டைகள், கோழியின எச்சம் மற்றும் கோழி தீவனங்கள் வாகனங்களில் ஏற்றி வருவது, மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.


