News November 7, 2025
நீலகிரியில் விபத்து.. நொறுங்கிய கார்!

நீலகிரி: ஊட்டி நொண்டிமேடு பகுதியை சேர்ந்தவர் சாருகேஷ் (21). இவரது நண்பர் நாகராஜ் (20). சாருகேஷ், நாகராஜை பெரிய பிக்கட்டியில் விடுவதற்காக காரில் சென்றார். ஊட்டி-குன்னூர் சாலை லவ்டேல் பகுதியில் சென்றபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த லாரி மீது மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. விபத்தில் 2 பேரும் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Similar News
News November 7, 2025
நீலகிரி: POLICE தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு!

1) நீலகிரி மாவட்டத்தில் நவ.9-ம் தேதி போலீஸ் தேர்வு நடைபெறவுள்ளது.
2) தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்.
3) ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்.
4) காலை 8 மணி முதல் 9.30 மணி வரை அறிக்கை நேரம். பின், 10 மணி முதல் பிற்பகல் 12.40 வரை தேர்வு நடைபெறும்.
5) வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய அனுமதி இல்லை.
இதை தேர்வு எழுதும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.
News November 7, 2025
நீலகிரி: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

நீலகிரி மக்களே, முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதியுதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு நீலகிரி மாவட்ட சமூக நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். SHARE பண்ணுங்க!
News November 7, 2025
நீலகிரியில் 2 பேர் அதிரடி கைது!

நீலகிரி: உதகை பேருந்து நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமாக சுற்றிய சானு, பானாசானு என்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். வட மாநிலத்தை சேர்ந்த இவர்கள், பள்ளி – கல்லூரி மாணவர்களை குறிவைத்து அவர்களுக்கு விற்பனை செய்வதற்காக 3 கிலோ கஞ்சா வைத்திருந்தது காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது. இருவரும் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு மேலும் உள்ள தொடர்புகள் மற்றும் கும்பல் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.


