News September 9, 2025

நீலகிரியில் யானை தாக்கி ஒருவர் மரணம்

image

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி குயிண்ட் பகுதியில் தோட்டத் தொழிலாளியாக வேலை பார்த்து வரும் சம்சுதீன் என்ற நபர் இன்று காலை ஏழு முப்பது மணி அளவில் பணிக்கு செல்லும் பொழுது மறைந்திருந்த யானை இவரை தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த செய்தி அப்பகுதி மக்களே துயரத்தில் ஆக்கியுள்ளது. மேலும் இதையறிந்த அப்பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கினர்.

Similar News

News March 6, 2026

நீலகிரியில் உயிர் காக்கும் முக்கிய வாட்ஸ்அப் எண்!

image

நீலகிரி மக்களே விபத்து காலங்களில் அவசர சிகிச்சைக்காக ‘108’ ஆம்புலன்ஸை அழைப்பதில் ஏற்படும் முகவரி சிக்கல்களைத் தவிர்க்க, தமிழக சுகாதாரத் துறை 94450 30725 என்ற புதிய வாட்ஸ்அப் எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் விபத்து நிகழ்ந்த இடத்தின் (Location) தகவலைத் துல்லியமாகப் பகிர்ந்து, ஆம்புலன்ஸ் சேவையை விரைவாகப் பெற முடியும். மனித உயிர்களைக் காக்கும் இந்த மிக முக்கியமான தகவலை SHARE பண்ணுங்க!

News March 6, 2026

நீலகிரி மாவட்டத்திற்கு மழை வாய்ப்பு!

image

தமிழக வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக, கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களின் சில இடங்களில் இன்றும் நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இம்மாறுபட்ட வானிலை மாற்றத்தை வானிலை ஆய்வு மையம் தனது சமீபத்திய செய்திக் குறிப்பில் உறுதிப்படுத்தியுள்ளது.

News March 6, 2026

குன்னூர்பள்ளியில் ஒன்பதாவது வகுப்பு படிக்கும் மாணவர் மரணம்

image

அருவங்காடு பகுதியைச் சார்ந்த, குன்னூர் தனியார் பள்ளியில் ஒன்பதாவது வகுப்பு படிக்கும் மாணவர் புகழ் இன்று மாலை பள்ளி முடிந்து வரும் வழியில் மரணம் அடைந்துள்ளார் தற்போது அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக குன்னூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் காவல்துறையினர் இது குறித்த விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!