News March 23, 2026
நீலகிரியில் மக்கள் பெரும் அச்சம்!

நீலகிரி மாவட்டம் தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட கணியம்வயல் பகுதியில், விவசாயி சியா என்பவரது பசு, மர்ம விலங்கு தாக்கியதில் உயிரிழந்தது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பசுவை கொன்றது புலியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
Similar News
News April 9, 2026
உதகையில் நூதன முறையில் பிரச்சாரம் செய்த வேட்பாளர்!

உதகையில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ரகுபதி பீமன், உதகை காய்கறி மார்க்கெட் பகுதியில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த தொழிலாளர்களுடன் இணைந்து காய்கறி மூட்டைகளைத் தூக்கி உதவி செய்த அவர், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் கலந்துரையாடி ஆதரவு திரட்டினார். வேட்பாளரின் இந்த வித்தியாசமான பிரச்சாரம் அப்பகுதி மக்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்தது.
News April 9, 2026
நீலகிரி இரவு ரோந்து போலீசார் விபரம்

நீலகிரி மாவட்டத்திலுள்ள உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி, பந்தலூர் மற்றும் குந்தா ஆகிய 6 தாலுகாக்களிலும் இன்று (ஏப்ரல் 8) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் குறித்த விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அவசரத் தேவைகளுக்குப் பொதுமக்கள் அந்தந்தப் பகுதி அதிகாரிகளின் தொடர்பு எண்களையோ அல்லது 100 என்ற இலவச தொலைபேசி எண்ணையோ உடனடியாகத் தொடர்பு கொள்ளலாம்.