News October 12, 2025
நீலகிரியில் பெரும் அச்சத்தில் பொதுமக்கள்!

நீலகிரி: தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு 10க்கும் மேற்பட்ட பசு மாடுகளை புலி வேட்டையாடி வந்த நிலையில், கடந்த ஒரு மாத காலமாக இப்பகுதியில் புலி நடமாட்டம் சற்று குறைந்திருந்தது. இந்நிலையில், நேற்று மீண்டும் அனுப் என்பவரின் பசுமாட்டை புலி கொன்றது. இதனால், இப்பகுதியில் மீண்டும் புலியின் தாக்குதல் அதிகரிக்குமா என்ற பெரும் அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர்.
Similar News
News April 13, 2026
கோத்தகிரி அருகே மனித எழும்புக்கூடு மீட்பு!

கோத்தகிரி அரவேனு அருகே மூணு ரோடு வனப்பகுதியை ஒட்டியுள்ள தேயிலை தோட்டத்திற்கு நேற்று தொழிலாளர்கள் பணிக்கு சென்றனர். அங்கு மனித எலும்புக்கூடு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து, கோத்தகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மற்றும் வனத் துறையினர் சென்று தனித்தனியாக கிடந்த எலும்புக்கூடுகளை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி GH-க்கு அனுப்பி வைத்தனர். பல கோணங்களில் போலீசார் விசாரத்து வருகின்றனர்.
News April 13, 2026
நீலகிரி மாவட்ட கலெக்டர் புதிய அறிவிப்பு!

நீலகிரி மாவட்ட தேர்தல் அதிகாரி லட்சுமி பவ்யா தண்ணீரு நிருபர்களிடம் கூறியதாவது, நீலகிரி மாவட்டத்தில் தற்போது 5 லட்சத்து 52 ஆயிரத்து 6 வாக்காளர்கள் உள்ளனர். இதில் புதிதாக ஊட்டி தொகுதியில் 1400 பேரும், கூடலூர் தொகுதியில் 1510 பேரும், குன்னூர் தொகுதியில், 1962 பேர் என மொத்தம் 4,873 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதில், 9 ஆயிரத்து 903 பேர் 18 வயது – 19 வயதுக்கு உட்பட்ட புதிய வாக்காளர்கள்.
News April 12, 2026
நீலகிரி: FEES இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
1. நீலகிரி மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 0423-24442777
2. தமிழ்நாடு அவசர உதவி: 04365-248121
3.Toll Free: 1800 4252 441
4. சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
5. உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.


