News February 26, 2025

நீலகிரியில் ‘பிளாஸ்டிக்’ தடை மாற்று ஏற்பாடு வேண்டும்

image

கூடலுாரில் வணிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா பேசுகையில், ”நீலகிரியில் தொடரும் ‘பிளாஸ்டிக்’ பிரச்னையால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அதிகாரிகள் கடைகளுக்கு அபராதம் விதித்து, ‘சீல்’ வைக்கும் நடைமுறையை கைவிட வேண்டும். நீலகிரி வரும் ‘பிளாஸ்டிக்’ பொருட்களை உற்பத்தி செய்யும் இடத்தில் தடுக்க வேண்டும்” என்றார்.

Similar News

News March 3, 2026

நீலகிரி: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நீலகிரி மாவட்டத்தில் நேற்று (மார்ச் 2) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களின் தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. உதகை நகரம், ஊரக உட்கோட்டம், குன்னூர், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளை தொடர்பு கொள்ள வேண்டிய எண்களை நீலகிரி மாவட்ட காவல்துறை பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

News March 2, 2026

உதகை: பொதுத்தேர்வு மையத்தில் ஆட்சியர் நேரில் ஆய்வு

image

உதகையிலுள்ள பிரிக்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் பிளஸ்-2 பொதுத்தேர்வினை, மாவட்ட ஆட்சியர் லட்சுமி பாவ்யா தண்ணீரு இன்று நேரில் ஆய்வு செய்தார். தேர்வுகள் முறையாக நடைபெறுகிறதா என்பதையும், மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் அவர் கேட்டறிந்தார். மேலும், பறக்கும் படையினரும் தீவிர கண்காணிப்பு மற்றும் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

News March 2, 2026

நீலகிரி: சொந்த தொழில் தொடங்க SUPER வழி!

image

நீலகிரி மக்களே சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லையே என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர் <>www.msmeonline.tn.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம். இந்த சூப்பரான தகவலை எல்லோரும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

error: Content is protected !!