News March 22, 2025
நீலகிரியில் பாஜகவின் கருப்பு கொடி கட்டும் போராட்டம்

பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை இன்றைய தினம் தமிழகமெங்கும் திமுக அரசைக் கண்டித்து அனைத்து நிர்வாகிகளும் கருப்புக்கொடி கட்டி போராட வேண்டும் என்று கூறினார். அதன்படி நீலகிரி மாவட்டத்தில் இன்று பாஜகவினர் கருப்பு நிற உடை அணிந்து தங்களது இல்லத்தில் கருப்பு கொடியை கட்டி தங்களது போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இதில் உதகையை சேர்ந்த பாஜக நிர்வாகி விஜயலட்சுமி வீட்டில் கருப்புக் கொடி போராட்டம் நடைபெற்றுவருகிறது.
Similar News
News September 22, 2025
நீலகிரி: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

நீலகிரி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். https://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணை அழைக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News September 22, 2025
நீலகிரி: அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஆற்றில் மிதப்பு!

எமரால்டு மற்றும் அவலாஞ்சி அணைகள் சந்திக்கும் சுருக்கி பாலம் பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தொடர் மழையின் காரணமாக ஆற்றின் நீர் அளவு அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று அப்பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. உடனடியாக விரைந்த எமரால்டு காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது கொலையா, தற்கொலையா, என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News September 22, 2025
நீலகிரி: கல்வி உதவித்தொகை பெற வேண்டுமா?

நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களை அறிந்திட நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு https://scholarships.gov.in என்ற இணையதளத்தை அணுகலாம்.