News January 5, 2026
நீலகிரியில் பரவிய வதந்தி!

நீலகிரி மாவட்டம், குன்னூர் மலை ரயில் இன்ஜினில் தீ விபத்து ஏற்பட்டதாக தவறான வதந்தி பரவியது. இதுகுறித்து நிலைய அதிகாரி கூறுகையில், நீராவி இன்ஜின் கண்ணாடி உடைந்ததே தவிர தீ விபத்து ஏதும் ஏற்படவில்லை. இது வழக்கமான நிகழ்வே என்றார். எனவே, ரயில் குறித்து தவறான வதந்திகளை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News January 27, 2026
நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்

நீலகிரி மாவட்டம் உதகை அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அவர், சிறப்பாகப் பணியாற்றிய அரசு அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.
News January 26, 2026
தொட்டபெட்டா ஊராட்சியில் கிராம சபா: கலெக்டர் பங்கேற்பு

நீலகிரி மாவட்டம், உதகை ஊராட்சி ஒன்றியம், தொட்டபெட்டா ஊராட்சி அலுவலகம் ஆடாசோலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின் மக்களின் மனுக்கள் குறித்த குறைகளை கேட்டு அறிந்து, விரைவில் மனுக்கள் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார்.
News January 26, 2026
நீலகிரியை சேர்ந்த 3 பேருக்கு அண்ணா விருது

சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று காவலர்களுக்கு அவர்களின் வீரதீரச் செயல்களைப் பாராட்டி அண்ணா விருது வழங்கப்பட்டது. தீயணைப்பு படை வீரர்கள் பா. சுரேஷ், செ. செந்தில்குமார் மற்றும் வாகன ஓட்டுநர் சங்கர் ஆகியோருக்குத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இவ்விருதுகளை வழங்கி கௌரவித்தார். இவர்களின் துணிச்சலை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.


