News October 15, 2025

நீலகிரியில் பன்றி காய்ச்சல்? கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

நீலகிரி கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரூ கூறுகையில், ”நீலகிரி மாவட்டம், முதுமலை மசினகுடி கோட்டம், மசினகுடி வனச்சரகம் தெப்பக்காடு பகுதியில் கடந்த காட்டுப்பன்றிகள் ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் ஏற்பட்டு உயிரிழந்தது. இந்நோய், மற்ற விலங்குகளுக்கு பரவாது என்பதால், கால்நடை வளர்ப்பவர்கள், பழங்குடியினர் உட்பட மக்கள் அச்சப்பட தேவையில்லை. ஆனால், பன்றி வளர்ப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்,” என்றார்.

Similar News

News October 15, 2025

நீலகிரி: பேரூராட்சிகளின் புதிய உதவி இயக்குநர்

image

நீலகிரி மாவட்ட பேரூராட்சிகள் புதிய உதவி இயக்குநராக மணிகண்டன் பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு அரசு அலுவலர்கள், பொதுமக்கள் வாழ்த்து தெரிவிக்கின்றனர். மேலும், மணிகண்டன் தனது அரசுப் பணியை கடைநிலை பதவியில் தொடங்கியவர். சிறப்பாக பொதுமக்களுக்கு பணியாற்றுபவர் என மக்கள் தெரிவிக்கின்றனர்.

News October 15, 2025

நீலகிரி ஆட்சியர் அறிவித்தார்!

image

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கால்நடை வளர்ப்போர் 50% மானியத்தில் புல் நறுக்கும் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூ அறிவித்துள்ளார். விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் இத்திட்டத்தில் பயன்பெற அருகாமையில் உள்ள கால்நடை நிலையங்களை அணுகி பயன்பெறலாம் எனவும் தெரிவித்துள்ளார் .

News October 15, 2025

நீலகிரி: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

image

1)நீலகிரியில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.
2)வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது.
3)உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!