News August 31, 2025
நீலகிரியில் நாளை முதல் இரண்டாம் சீசன் துவக்கம்!

நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு சுற்றுலா சீசன்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. முதல் சீசன் மார்ச் இறுதி வாரம் தொடங்கி ஜூன் முதல் வாரம் வரையும், இரண்டாம் சீசன் செப்டம்பர் மாதம் தொடங்கி நவம்பர் மாதம் வரையும் நடைபெறும். இந்த நிலையில், இரண்டாம் சீசன் நாளை தொடங்குகிறது. இதனால், நாளை முதல் உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News September 1, 2025
’மலைகளின் ராணி’ நீலகிரி உருவான கதை!

நீலகிரி என்றால் ’நீலமலை’ என்று பொருள். தமிழின் தொன்மையான இலக்கியமான சிலப்பதிகாரத்தில் இந்தப் பெயரைக் காண முடியும். 1818ஆம் ஆண்டில், அப்போதைய கோவை ஆட்சியர் ஜான் சுல்லிவன் தனது உதவியாளர்களுடன் கோத்தகிரியைக் கண்டறிந்தார். நீலகிரியின் இயற்கை வளங்கள், நீர் நிலைகளுக்கு மூலதனம் அவரே. மேலும் பூர்வகுடி மக்களுக்கு பட்டா, சிட்டா வழங்கி ‘உழுபவருக்கே நிலம்’ என அறிமுகம் செய்தார்.
News September 1, 2025
நீலகிரி: விவசாயிகள் குறை தீர்ப்பு நாள் கூட்டம்

உதகை மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலக அரங்கில் செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு விவசாயிகள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெறுகிறது . எனவே விவசாயிகள் தங்களுடைய விவசாயம் சம்மந்தப்பட்ட கோரிக்கைகளை 5 தேதிக்குள் தோட்டக்கலை இயக்குனர் தபால் பெட்டி 72 , உதகை 643001 முகவரிக்கு அனுப்பலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News August 31, 2025
நீலகிரி மாவட்ட இரவு ரோந்து பணி விபரம்

நீலகிரி மாவட்டத்தில் இன்று (31.08.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.