News December 15, 2025
நீலகிரியில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள்!

நீலகிரி மாவட்டம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சாந்தநாயகி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (டிச.16), மஞ்சூர், கீழ் குந்தா, இரியசீகை, பெங்கால் மட்டம், மஞ்சக்கோம்பை, பிக்கட்டி, கோட்டக்கல் முக்கிமலை, எடக்காடு, காயகண்டி, கோரகுந்தா, ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 19, 2025
நீலகிரிக்கு உறைபனி எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கடும் குளிர் நிலவுகிறது. நாட்டில் வீசி வரும் குளிர் காற்று, தமிழகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டம் மலைப்பகுதிகளில் இன்று (டிசம்பர் 19) உறைபனி ஏற்படும் வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் குளிருக்கு ஏற்ப பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கூடலூர் அருகே லாரி – பைக் மோதி விபத்து!

நீலகிரி மாவட்டம், பந்தலூர் எருமாடு பகுதியை சேர்ந்தவர் திர்ஷியா. இவர் காலை இருசக்கர வாகனத்தில் சுயதொழில் தொடர்பான பயிற்சிக்காக கூடலூர் நோக்கி வந்துள்ளார். கோழிக்கோடு சாலை செம்பாலா அருகே லாரியை முந்திச்செல்ல முயன்றபோது, எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்த திர்ஷியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கூடலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.