News April 9, 2025
நீலகிரியில் டாஸ்மாக் கடைகள் மூட உதித்தரவு!

மகாவீர் ஜெயந்தி தினம் நாளை கடைபிடிக்கப்படுவதால், நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகள், கிளப் பார்கள், ஹோட்டல் பார்கள் அனைத்தும் மூடவேண்டும். உத்தரவை மீறி மதுபானங்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட மது விற்பனை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.
Similar News
News April 21, 2025
நீலகிரி: முக்கிய அரசு அதிகாரிகள் தொடர்பு எண்கள்!

▶️ நீலகிரி மாவட்ட வருவாய் அலுவலர் 0423-2441233. ▶️மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) 0423-2444012. ▶️மாவட்ட வழங்கல் அலுவலர் 0423-2441216 ▶️மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் 0423-2444004. ▶️முதன்மை கல்வி அலுவலர் 0423-2443845. ▶️வருவாய் கோட்டாட்சியர், உதகை 0423-2445577. ▶️வருவாய் கோட்டாட்சியர், குன்னூர் 0423-2206002. ▶️வருவாய் கோட்டாச்சியர், கூடலூர் 04262-261295. இதை SHARE பண்ணுங்க.
News April 21, 2025
நீலகிரி: ரேஷன் கடையின் கதவை உடைத்த யானை

நீலகிரி, தேவர் சோலை காவல் நிலையம் பின்புறம் உள்ள தேயிலைத் தோட்ட கட்டடத்தில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு வந்த காட்டு யானை, கடையின் ஷட்டரை இடித்து தள்ளி, ரேஷன் பொருட்களை சேதப்படுத்தியுள்ளது. இந்தக் கடையினை தொடர்ந்து சேதப்படுத்தி வரும் யானையிடமிருந்து பாதுகாக்க, கம்பிகளால் ஆன வேலி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
News April 20, 2025
நீலகிரியில் குறைகளைக் களையும் குமரன்!

நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் அமைந்துள்ளது அன்னமலை முருகன் கோயில். குறிஞ்சி நிலத்தில் எழுந்தருளியுள்ள தமிழ் கடவுளான முருகப் பெருமான், கையில் தண்டம் ஏந்தி தண்டாயுதபாணியாக இத்திருத்தலத்தில் காட்சி அளிக்கிறார். உதகையில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் இந்த கோயில் அமைந்துள்ளது. பக்தர்களின் பிரார்த்தனை, குறைகளை களையும் வகையில் இத்தலத்தில் தண்டாயுதபாணி அருள்பாலிக்கிறார். SHARE செய்யவும்.