News August 24, 2025

நீலகிரியில் கரண்ட் பில் அதிகமா வருதா?

image

கரண்ட் பில் கட்டணம் அதிகமா வருதா? கவலையை விடுங்க இது போன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம். அல்லது 94987-94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்..!

Similar News

News August 24, 2025

நீலகிரி: 800க்கும் மேற்பட்ட போலீசார்கள்

image

நீலகிரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி ஒட்டி இதுவரை 512 இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் சிலை ஊர்வலத்தை ஒட்டி 800க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் எனவும், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது எனவும் தெரிவித்துள்ளனர்.

News August 24, 2025

நீலகிரி எம்.பி நிகழ்ச்சி நிரல் விபரம்

image

நீலகிரி எம்.பி ராசா வரும் ஆக.26 ஆம் தேதி கோத்தகிரி புனித அந்தோனியார் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை துவக்கி வைக்கிறார். காலை 10:30 மணிக்கு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை ஊட்டியில் துவக்கி வைத்தல், காலை 11:00 மணிக்கு ஊட்டியில் மருத்துவக் கல்லூரி பேருந்து நிறுத்தம் திறப்பு, 11:30 மணிக்கு காந்தல் பகுதியில் தரம் உயர்த்தப்பட்ட உருது பள்ளியை திறந்து வைக்கிறார்.

News August 24, 2025

நீலகிரி மாவட்டத்தில் பதிவான மழையளவு

image

நீலகிரி மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வந்தது. இதையடுத்து கூடலூரில் 2 மில்லி மீட்டர் மழையும், நடுவட்டம் 7 மில்லி மீட்டர் மழையும், பந்தலூரில் 4 மில்லி மீட்டர் மழையும், தேவாலாவில் 3 மில்லி மீட்டர் மழையும், உதகமண்டலம் 32 மில்லி மீட்டர் மழையும், பரவுட் 5 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!