News November 18, 2024

நீலகிரியில் கட்டணம் உயர்வு: குறைந்தது வருவாய்

image

காட்டேரி பூங்காவில் கடந்த காலங்களில் கேமராவுக்கு, 50 ரூபாய்; வீடியோ கேமராவுக்கு, 100 ரூபாய் என இருந்ததால், திருமண புகைப்பட, வீடியோ ஆல்பம் எடுக்க நாள்தோறும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து புகைப்படக்காரர்கள் அதிகம் வருகைதந்தனர். ஆனால், சமீபத்தில் திடீரென கேமராக்களுக்கு, ரூ.5000 கட்டணம் வாங்கி பல மடங்கு உயர்த்தியதால் தற்போது கூட்டம் வருவதில்லை. இதனால், தோட்டக்கலை துறைக்கு வருவாயும் குறைந்துள்ளது.

Similar News

News November 19, 2024

நீலகிரியில் 6 குரங்குகள் பலி: மின்னல் தான் காரணமா?

image

கோத்தகிரி டான்பஸ்கோ சாலையில் உள்ள பள்ளி வளாகத்தில் ஒரே இடத்தில் 6 குரங்குகள் விழுந்து உயிரிழந்துள்ளன. தகவல் அறிந்த வனத்துறையினர் அவைகளை மீட்டு பிரேத பரிசோதனை செய்தனர். இவை மின்னல் தாக்கி பலியானதாக சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து ரேஞ்சர் செல்வராஜ் கூறுகையில், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே எதுவும் சொல்ல முடியும் என்றார்.

News November 19, 2024

நீலகிரியில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்

image

உதகை, கேத்தி, சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 23ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. கல்வி தகுதி 8வது வகுப்பு முதல் பட்ட படிப்பு வரை, ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங், பார்மசி, பொறியியல் படிப்பு ஆகும் . நீலகிரி மாவட்ட நிர்வாகம் , மாவட்ட தொழில் நெறி வழிகாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியவை ஏற்பாடு செய்துள்ளன.

News November 19, 2024

ஜனாதிபதி நீலகிரிக்கு வருகை: கலெக்டர், எஸ்பி ஆலோசனை

image

குடியரசு தலைவர் திரவுபதி முர்மு 4 நாட்கள் பயணமாக நவ.27-ம் தேதி தமிழகம் வருகிறார்; நீலகிரியில் தங்குகிறார், இவர் வருகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா, விமானப்படை அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினர்.