News November 17, 2024
நீலகிரியில் இலவச கண் சிகிச்சை முகாம்

நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், நீலகிரி சேவா கேந்திரம், எச்ஆர்எம் மெம்மோரியல் டிரஸ்ட், கோவை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தவுள்ளது.இட்டக்கல்லில் உள்ள (HRM) மெம்மோரியல் மெட்ரிகுலேசன் பள்ளியில் இன்று (நவ.17) காலை 9 முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது.சிகிச்சைக்கு வருபவர்கள் தெளிவான முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை எடுத்து வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 3, 2026
நீலகிரியில் வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு!

நீலகிரி மாவட்டம் குன்னூர் தலைமை தபால் நிலையத்திலுள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு நேற்று மின்னஞ்சல் (E-mail) மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் வளாகம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது போன்ற வதந்திகளை பரப்புவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
News March 3, 2026
குன்னூர் மக்களுக்கு வந்த சோதனை!

குன்னூர் வண்டிப்பேட்டை அம்மா உணவகத்தில் மாவு அரைக்கும் இயந்திரம் பழுதானதால், காலை உணவாக இட்லி வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. சமையல் கூடம் சேதமடைந்தும், உபகரணங்கள் பராமரிப்பின்றி உள்ளதாலும் பொங்கல் மற்றும் கலவை சாதம் மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர் வருகை குறைந்துள்ள நிலையில், இயந்திரத்தைச் சீரமைத்து அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டுமெனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
News March 3, 2026
நீலகிரி: இரவு ரோந்து போலீசார் விவரம்

நீலகிரி மாவட்டத்தில் நேற்று (மார்ச் 2) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களின் தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. உதகை நகரம், ஊரக உட்கோட்டம், குன்னூர், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளை தொடர்பு கொள்ள வேண்டிய எண்களை நீலகிரி மாவட்ட காவல்துறை பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.


