News September 4, 2025

நீலகிரியில் இலவசமாக செடி, விதை பெற அழைப்பு!

image

நீலகிரி மக்களே கொய்யா,பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள்,தக்காளி, கத்தரி, மிளகாய்,வெண்டை மற்றும் கீரை விதை அடங்கிய காய்கறி விதை தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள்,பொது மக்கள் பயன் படுத்திக்கொள்ளலாம்.விண்ணபிக்க<> இங்கே கிளிக்<<>> செய்யவும் அல்லது உங்கில் அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகம் மற்றும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் பதிவு செய்து பயன் பெறலாம்.SHARE பண்ணுங்க

Similar News

News September 4, 2025

ஊட்டி அரசு பள்ளி மாணவர்கள் மாநில அளவில் சாதனை!

image

சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில எச்ஐவி கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் நடைபெற்ற வினாடி வினா போட்டியில் ஊட்டியில் உள்ள அணிக்கொரை அரசு பள்ளி மாணவர்களான மாணவி ரக்ஷிதா, மாணவர் பாலாஜி ஆகியோர் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து வெற்றி பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

News September 4, 2025

நீலகிரி: உங்க போன்ல இந்த நம்பர் இருக்கா?

image

ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம் உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க

News September 4, 2025

நீலகிரி: சோலாடா பள்ளி தலைமை ஆசிரியைக்கு விருது

image

தமிழக கல்வித்துறையில் சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு, இந்த ஆண்டு உதகை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சோலாடா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை பியூலா ரோஸ்லின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான இந்த உயரிய விருது, அவரது சிறப்பான கல்விச் சேவைக்காக வழங்கப்படுகிறது.

error: Content is protected !!