News August 4, 2024

நீலகிரியில் இன்று மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் பருவ மழை தீவிரமடைந்து பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகின்றது. இந்நிலையில், நீலகிரி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று இரவு 8.30 மணி வரை இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இடையிடையே 30-40 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News February 7, 2026

நீலகிரி: ஆன்லைனில் பணம் அனுப்புபவரா நீங்கள்?

image

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்பி வருகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

News February 7, 2026

நீலகிரி: இனி அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்!

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: ‘<>NSDL<<>>’ 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.in இந்த இணையதளங்களில் விண்ணப்பிங்க. ஷேர் பண்ணுங்க!

News February 7, 2026

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் கருப்பு கேரட்

image

நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் நோக்கில், கடந்த நவம்பர் மாதம் தோட்ட கலைத்துறை சார்பில் டெல்லியில் இருந்து வரவழைக்கப்பட்ட கருப்பு நிற கேரட் விதைகள் விதைக்கப்பட்டு தற்போது முதன்முறையாக அறுவடைக்கு தயாராகியுள்ளது. பூங்கா மேலாளர் லட்சுமணன் கூறுகையில் சோதனை முயற்சியாக விதைக்கப்பட்டு வருகிறது, மார்ச் 15க்கு பிறகு அறுவடைக்கு தயாராகும் என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!