News November 18, 2024
நீலகிரியில் அதிகரிக்கும் சைபர் கிரைம் மோசடி
நீலகிரி மாவட்டத்தில் சைபர் கிரைம் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு மாவட்ட எஸ்பி அறிவுறுத்தியுள்ளார். இரட்டிப்பு லாபம் தருவதாக ஆசை வார்த்தை கூறினால் யாரும் நம்ப வேண்டாம். தெரியாத லிங்குகளை தொட கூடாது. குறிப்பாக செல்போனுக்கு வரக்கூடிய ஓடிபி எண்களை யாருக்கும் அனுப்பக்கூடாது. மேலும் காவல் துறை சார்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.
Similar News
News November 19, 2024
நீலகிரியில் 6 குரங்குகள் பலி: மின்னல் தான் காரணமா?
கோத்தகிரி டான்பஸ்கோ சாலையில் உள்ள பள்ளி வளாகத்தில் ஒரே இடத்தில் 6 குரங்குகள் விழுந்து உயிரிழந்துள்ளன. தகவல் அறிந்த வனத்துறையினர் அவைகளை மீட்டு பிரேத பரிசோதனை செய்தனர். இவை மின்னல் தாக்கி பலியானதாக சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து ரேஞ்சர் செல்வராஜ் கூறுகையில், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே எதுவும் சொல்ல முடியும் என்றார்.
News November 19, 2024
நீலகிரியில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்
உதகை, கேத்தி, சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 23ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. கல்வி தகுதி 8வது வகுப்பு முதல் பட்ட படிப்பு வரை, ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங், பார்மசி, பொறியியல் படிப்பு ஆகும் . நீலகிரி மாவட்ட நிர்வாகம் , மாவட்ட தொழில் நெறி வழிகாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியவை ஏற்பாடு செய்துள்ளன.
News November 19, 2024
ஜனாதிபதி நீலகிரிக்கு வருகை: கலெக்டர், எஸ்பி ஆலோசனை
குடியரசு தலைவர் திரவுபதி முர்மு 4 நாட்கள் பயணமாக நவ.27-ம் தேதி தமிழகம் வருகிறார்; நீலகிரியில் தங்குகிறார், இவர் வருகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா, விமானப்படை அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினர்.