News October 10, 2025
நீர்வளத்துறை சார்பில் ஆய்வுக் கூட்டம்

சென்னை தலைமைச் செயலகத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் இன்று (அக்10) நீர்வளத்துறையின் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து மாநில அளவிலான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், நீர்வளத்துறை செயலாளர் ஜெ.ஜெயகாந்தன், காவிரி தொழில்நுட்பக் குழுமம் மற்றும் பன்மாநில நதிநீர்ப் பிரிவின் தலைவர் சுப்பிரமணியன், நீர்வளத் துறையின் சிறப்புச் செயலாளர் ஸ்ரீதரன் உள்ளார்.
Similar News
News October 10, 2025
துணை நடிகையின் தாயை தாக்கிய நபர் கைது

சென்னையை அடுத்த ஆலப்பாக்த்தில் துணை நடிகை மீனாட்சி கோவிந்தராஜன், மற்றும் அவரது தாயாரையும் செருப்பால் அடித்த நபரை போலீசார் கைது செய்தனர். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தகராறை தொடர்ந்து, தற்போது பழிவாங்கும் நோக்கில் செருப்பால் அடித்ததாக கைதான நபர் போலீசாரிடம் வாக்குமூலம் தந்துள்ளார்.
News October 10, 2025
சென்னை ரயில்வே கோட்டம் எச்சரிக்கை

சென்னை கோட்டத்திற்குட்பட்ட ரயில் நிலைய வளாகங்கள், நடைமேடைகள், பயணச்சீட்டு வழங்கும் இடங்கள், சுவர்கள், ரயில் பெட்டிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அங்கீகாரமற்ற சுவரொட்டிகள், பதாகைகள், ஸ்டிக்கர்கள், விளம்பரங்கள் ஒட்டப்பட்டு வருவது கவனிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற செயல்களுக்கு எதிராக தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
News October 10, 2025
நாளை கிராம சபை கூட்டம்: ககன்தீப் சிங் பேடி பேட்டி

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அவர், “தமிழ்நாடு முழுவதும் நாளை (அக்.11) கிராம சபைக் கூட்டம் நடக்கிறது. இதில் வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார். பைபர் நெட் இணைப்பை பயன்படுத்தி முதல்வர் பேசுவது, மாநிலம் முழுவதும் 10,000 கிராம பஞ்சாயத்துகளில் நேரலையாக ஒளிபரப்பாகும்” என கூறினார்