News August 19, 2025

நீர்வரத்து அதிகரிப்பு – பரிசல் இயக்க தடை

image

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் நேற்று(ஆக.18) வரை 50,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று(ஆக.19) காலை நிலவரப்படி 78,000 கனஅடியாக அதிகரித்துள்ளது, அதனால் ஏற்கனவே பரிசல்கள் இயக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் குளிக்கவும் தடை , கரையோர பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 19, 2025

தர்மபுரி : B.E படித்தவர்களுக்கு ஏர்போர்ட் வேலை!

image

இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள 976 ஜூனியர் நிர்வாகி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. கட்டக்கலை, சிவில், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், தகவல் தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளில் பி.இ, பி.டெக், எம்.சி.ஏ மற்றும் கேட் தேர்வில் வெற்றி பெற்ற பட்டதாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். ரூ.40,000 – ரூ.1,40,000 வரை சம்பளம். செப்.27ம் தேதி கடைசிநாள் <>மேலும் விவரங்களுக்கு<<>>. ஷேர் பண்ணுங்க.

News August 19, 2025

தர்மபுரியில் இன்று உங்களுடன் ஸ்டாலின்

image

தர்மபுரி மாவட்டத்தில் இன்று (ஆக.19) தர்மபுரி நகராட்சியில் செங்குந்தர் மண்டபம், அரூர் பேரூராட்சியில் பொன் கற்பகம் மண்டபம், தர்மபுரி வட்டாரத்தில் இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பென்னாகரம் வட்டாரத்தில் கூத்தபாடி பெரியார் மண்டபம், ஏரியூர் வட்டாரத்தில் ஜக்கம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம், பாலக்கோடு வட்டாரத்தில் பாடி சமுதாய கூடம் ஆகிய இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. SHARE

News August 19, 2025

நாளை தருமபுரியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

image

தருமபுரி மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நாளை நடைபெற உள்ளது. இந்த முகாம் தருமபுரி செங்குந்தர் திருமண மண்டபம், அரூர் பொன் கற்பகம் திருமண மண்டபம், இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பென்னாகரம் கூத்தப்பாடி பெரியார் திருமண மண்டபம், ஏரியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஜக்கம்பட்டி மற்றும் பாலக்கோடு சமுதாய கூடம் பாடி ஆகிய இடங்களில் நடைபெறும்.

error: Content is protected !!