News April 24, 2025
நீர்நிலைகளில் போலீஸ் ரோந்து – எஸ் பி உத்தரவு

கோடை விடுமுறை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் நீர்நிலைகளுக்கு ஏராளமானவர்கள் சென்று வருகிறார்கள். இதனால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க நீர்நிலைப் பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். மேலும் நீர் நிலைகளில் குளிக்க வருபவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.
Similar News
News July 11, 2025
ஊரக வேலை உறுதித் திட்ட குறை கேட்கும் முகாம்

குமரி மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு பணி புரியும் மாற்றுத்திறனாளிகள் திட்டம் தொடர்பான குறைகளை தீர்க்கும் பொருட்டு ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் முன்னிலையில் குறை கேட்கும் முகாம் நடைபெற உள்ளது. ஜூலை.15 அன்று பிற்பகல் 3 மணிக்கு ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இம்முகாம் நடைபெறும் என ஆட்சியர் அலுவலகம் நேற்று வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News July 11, 2025
குமரி அணைகளின் இன்றைய நீர்மட்டம் விவரம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசனத்திற்கு பயன்படும் அணைகளின் இன்றைய (ஜூலை.11) நீர்மட்ட விவரம் பேச்சிப்பாறை அணை 41.56 அடி (மொத்தம் 48 அடி), பெருஞ்சாணி அணை – 70.60 அடி (77 அடி), சிற்றாறு 1 அணை – 13.19 அடி (18 அடி), சிற்றாறு 2 அணை – 13.28 அடி (18 அடி) நீர் உள்ளது. பேச்சிப்பாறைக்கு 225 கனஅடி, பெருஞ்சாணிக்கு 24 கனஅடி நீர்வரத்தும் உள்ளது.
News July 11, 2025
குமரி: குரூப்-4 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு

➡️ குமரி மாவட்டத்தில் நாளை (ஜூலை.12) குரூப்-4 தேர்வு நடைபெறவுள்ளது.
➡️ தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்.
➡️ ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்.
➡️ BLACK INK BALL POINT பேனாவுக்கு மட்டுமே அனுமதி.
➡️ காலை 9 மணிக்கு முன்னதாக தேர்வறைக்குள் செல்ல வேண்டும்.
➡️ வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய அனுமதி இல்லை.
➡️ தேர்வு எழுதும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.