News November 4, 2025
நீரிழிவு நோயா? இந்த பழங்கள் சாப்பிடலாம்

நீரிழிவு நோய் உள்ளவர்கள் உணவு கட்டுப்பாட்டில் அதிக கவனம் செலுத்துவதால், பழங்களையும் தவிர்த்து விடுவார்கள். ஆனால், குறைந்த சர்க்கரை அளவு, அதிக நார்ச்சத்து கொண்ட பழங்கள், சர்க்கரையை சீராக வைத்திருக்கும். அது என்னென்ன பழங்கள் என தெரிந்து கொள்ள மேலே உள்ள படங்களை வலது பக்கம் Swipe செய்து பார்க்கவும். உங்களுக்கு தெரிந்த வேறு பழம் இருந்தால் கமெண்ட்ல சொல்லுங்க. நண்பர்களுக்கு அதிகளவு பகிரவும்.
Similar News
News November 4, 2025
BREAKING: திமுகவில் பொன்முடிக்கு மீண்டும் பதவி!

Ex அமைச்சர் பொன்முடி மீண்டும் திமுகவின் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சைவம், வைணவத்தை பெண்களுடன் ஒப்பிட்டு ஆபாசமாக பேசிய சர்ச்சையில் கடந்த ஏப்ரல் மாதம் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் கட்சியில் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், அமைச்சர் சாமிநாதனுக்கும் துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதனால், திமுகவில் து.பொ., எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
News November 4, 2025
ரஷ்யாவில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

ரஷ்யாவின் கிழக்கில் அமைந்துள்ள Kamchatka பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிர்வு 24 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ள நிலையில், இதுவரை எந்த சேத விவரமும் பதிவாகவில்லை. இப்பகுதியில் உள்ள கண்டத் தட்டுகள் (Tectonic Plates) நகர்ந்து வருவதால், இங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.
News November 4, 2025
மாதம்பட்டிக்கு செக் வைத்த மகளிர் ஆணையம்!

மாதம்பட்டி ரங்கராஜ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க மாநில மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. திருமணம் செய்து மோசடி செய்து விட்டதாக ஜாய் கிரிசில்டா அளித்த புகாரில், சென்னை காவல்துறை ஆணையருக்கு மகளிர் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. முன்னதாக, கடந்த அக்டோபர் 31-ம் தேதி ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது. பிறப்பு சான்றிதழில், த/பெயர் ரங்கராஜ் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.


