News April 15, 2025

நீரில் மூழ்கி இறந்த 3 சிறுவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் நிதி உதவி

image

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், காட்டுமன்னார்கோயில் அருகே வடக்கு கொளக்குடியில் வெள்ளியங்கால் ஓடையில் குளிக்க சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். இச்சம்பவத்தில் இறந்த சிறுவர்களின் பெற்றோர்களுக்கு தலா ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன், என கூறப்பட்டுள்ளது.

Similar News

News September 16, 2025

கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று(செப்.15) இரவு 10 மணி முதல் இன்று (செப்.16) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News September 15, 2025

கடலூர்: சகலமும் அருளும் கோயில்!

image

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள தில்லை காளி கோயில் 1229 மற்றும் 1278க்கு இடைப்பட்ட சோழ மன்னர் கோப் பெருஞ்சிங்கனால் கட்டப்பட்டது. காளிதேவி சிவபெருமானிடம் நாட்டிய போட்டியில் தோற்றபிறகு இங்கு சென்றார் என்று புராணக்கதை கூறுகிறது. இக்கோயிலில் அம்மன் 4 முகங்களுடன் காட்சி தருவது சிறப்பாகும். இக்கோயிலில் வழிபட்டால் சகல சௌபாக்கியம் கிடைக்கும், எதிரிகள் தொல்லை தீரும் என்பது நம்பிக்கை. இதை SHARE பண்ணுங்க.

News September 15, 2025

கடலூர் மக்களே… பட்டா, சிட்டா விபரங்களை அறிய எளிய வழி!

image

கடலூர் மக்களே…உங்களது நிலம் தொடர்பான ஆவணங்கள் குறித்து<> eservices.tn.<<>>gov.in என்ற இணையதளத்தில் எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் இதன் மூலம் உங்களது நில விவரம், பட்டா திருத்தம், புல எல்லை வரைபடம் உள்ளிட்ட சேவைகளை மேற்கொள்ளலாம் அல்லது உரிய ஆவணங்களுடன் தங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை SHARE மற்றும் LIKE பண்ணுங்க..

error: Content is protected !!