News March 26, 2025
நீதி கேட்டு போராட்டம்: போலீசாருடன் தள்ளுமுள்ளு 2/2

பாலிடெக்னீக் கல்லூரி மாணவி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க கல்லூரி நிர்வாகம் மறுத்ததோடு, அந்த மாணவிக்கு ‘டீசி’ கொடுத்து அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டு SFI மாணவர் சங்கத்தினர் நேற்று (மார்.25) கல்லூரி முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் தடுக்க முயன்றதால், இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
Similar News
News March 29, 2025
நந்தனம் கல்லுரியில் வேலைவாய்ப்பு முகாம்

சென்னை நந்தனம் அரசு கலை அறிவியல் கல்லூரியில், இன்று (மார்.29) வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 200க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. காலை 8 மணியளவில் தொடங்கி பிற்பகல் 3 மணிவரை நடைபெறும். இந்த முகாமில் சுமார் 20,000 இளைஞர்களுக்கு அவர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப பணி வழங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த <
News March 29, 2025
காற்று மாசுபாடு: ரூ.5 லட்சம் வரை அபராதம்

சென்னை மாநகரில் கட்டுமான பணிகளால் ஏற்படும் காற்று மாசுவை தணிக்க தவறினால் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கும் வகையில் வரைவு வழிகாட்டுதலை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. காற்று மாசுபாட்டை தணிக்கும் நடவடிக்கைகளை பணியாளர்கள் பின்பற்றுவதை உறுதி செய்ய சிசிடிவி கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வுக்கு வரும்போது அதை சமர்ப்பிக்க வேண்டும் என மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்தார்.
News March 29, 2025
நீட் தேர்வு அச்சம்: மாணவி தூக்கிட்டு தற்கொலை

கிளாம்பாக்கத்தைச் சேர்ந்த தர்ஷினி என்ற மாணவி, அண்ணாநகரில் உள்ள தனியார் அகாடமியில் நீட் தேர்வுக்கு பயின்று வந்துள்ளார். வரும் மே மாதம் நடைபெற உள்ள தேர்வுக்கு தயாராகி வந்த இவர், ஏற்கெனவே 2021ஆம் ஆண்டு முதல் 2 முறை நீட் தேர்வு எழுதி கட் ஆப் வரவில்லை. இந்நிலையில், தேர்வுக்கு பயந்து நேற்று (மார்.28) தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.