News December 17, 2025
நீதிபதி உத்தரவால் இந்தியா பற்றி எரிகிறது: அரசு

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை, மதுரை ஐகோர்ட்டில் இன்று 3-வது நாளாக நடந்தது. அப்போது, மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று தான் ராம ரவிக்குமார் குறிப்பிட்டார். ஆனால், தனி நீதிபதி (G.R.சுவாமிநாதன்) தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டதால், இந்தியா பற்றி எரிகிறது. நீதிபதி தேர்தலில் போட்டியிட தயாராகிக் கொண்டிருக்கிறார் என அரசு தரப்பு வாதத்தை முன்வைத்தது.
Similar News
News December 20, 2025
கார் விபத்தில் சிக்கினார் நடிகர் சிவகார்த்திகேயன்

சென்னையில் நடிகர் சிவகார்த்திகேயன் சென்ற கார் விபத்தில் சிக்கியது. மத்திய கைலாஷ் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற கார் மீது சிவகார்த்திகேயனின் கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அங்கிருந்த போக்குவரத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காரில் இருந்த சிவகார்த்திகேயனுக்கு காயம் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
News December 20, 2025
குழந்தைக்கு புழு தொல்லையா? இதோ தீர்வு

வயிற்றில் புழு தொல்லை இருப்பதால் குழந்தை சரியாக சாப்பிடுவதில்லையா? இதனை சரி செய்ய சித்த மருத்துவத்தில் வழி இருக்கிறது. நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் வாய்விளங்கம் 25 g, மிளகு 3-5 g எடுத்து, குப்பைமேனி சாறுடன் கலந்து, வெயிலில் வைக்கவும். சாறு வற்றியவுடன், பொடிசெய்து, அரை டீஸ்பூன் எடுத்து, 3 நாள்களுக்கு கொடுக்கவும். 2 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம்.