News June 24, 2024
நீதிபதிக்கு திடீர் உடல்நல குறைவு

மதுரை உயர்நீதிமன்ற கிளையின் நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி ஆதி கேசவலுக்கு இன்று திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. நீதிமன்றத்தில் வழக்குகளை விசாரித்து கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் உடனடியாக நீதிமன்ற ஊழியர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Similar News
News July 11, 2025
மதுரையில் ரேஷன் கார்டு குறைதீர் முகாம்

மதுரை மாவட்டத்தில் பொது வினியோக திட்ட சேவைகள் குறித்த மக்கள் குறைதீர் முகாம் வருகிற 12-ம் தேதி குடிமைப் பொருள் வட்டாட்சியர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் காலை 10மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. இந்த முகாமில் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்க, கார்டில் பெயர், முகவரி, போன் நம்பர், பெயர் நீக்கம், பெயர் சேர்த்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம். மக்களே, மிஸ் பண்ணிடாதீங்க SHARE பண்ணுங்க.
News July 11, 2025
பத்து சதவீதம் பாதிப்பு இருந்தாலும் பதிவு செய்து பயனடையலாம்

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக்காக அரசு பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் உலக வங்கி நிதியுடன் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதன்படி மதுரை மாவட்டத்தில் நேற்று முதல் வீடுவீடாக மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு துவங்கியுள்ளது. 10% பாதிப்பு இருந்தாலும் பதிவு செய்து கொள்வர்.தெரிந்த அனைவருக்கும் SHARE பண்ணுங்க.உங்களால் ஒருவர் கண்டிப்பாக பயனடைவார்.
News July 11, 2025
இன்று முதல் 2 சூப்பர் பாஸ்ட் ரயில்களின் நேரம் மாற்றம்

சென்னை சென்ட்ரல்-போடிநாயக்கனூர், மைசூர்-தூத்துக்குடி ஆகிய இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் வேகம் அதிகரித்தல் காரணமாக நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி காலை 7.10 மணிக்கு மதுரை வரவேண்டிய போடி எக்ஸ்பிரஸ் 6.40 மணிக்கே வந்துவிடும். அதேபோல் 7.35 மணிக்கு வர வேண்டிய மைசூர் எக்ஸ்பிரஸ் 7.25 மணிக்கு வந்தடைந்து விடும். எனவே பயணிகள் முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளும்படி தெற்கு ரயில்வே அறிவுறுத்தி உள்ளது.