News April 29, 2024
நீதித்துறையில் வேலை வாய்ப்பு

விழுப்புரம் மாவட்ட (கள்ளக்குறிச்சி உள்பட) நீதித்துறையில் 124 காலியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி. வயது வரம்பு: ஜூலை 1ஆம் தேதி 2024 அன்று 32 வயதுக்குள் இருக்க வேண்டும். பணி இடங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை https://www.mhc.tn.gov.in/recruitment/notification_dist தளத்தில் மூலம் அறிந்து கொள்ளலாம். இதற்கான விண்ணப்பங்களை மே 27ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
Similar News
News November 4, 2025
விழுப்புரம்: பொன்முடிக்கு மீண்டும் கட்சி பதவி!

விழுப்புரம் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு திமுகவின் துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. விழுப்புரம் நகர திமுக அலுவலகம் மற்றும் காந்தி சிலை முன்பு திமுகவினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். சைவ,வைனவ சர்ச்சை பேச்சால் இவரது கட்சி பதவி பறிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மீண்டும் அவருக்கு பதவி வழங்கப்பட்டது.
News November 4, 2025
பனை விதைகளை நட்டு வைத்த ஆட்சியர் அப்துல் ரஹ்மான்

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஒன்றியத்திற்குட்பட்ட அய்யங்கோயில்பட்டு ஊராட்சி முத்தாம்பாளையம் ஏரிக்கரையோரம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்,அவர்கள் இன்று (நவ.04) பனை விதைகளை நட்டு வைத்தார். உடன் உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.ரா.வெங்கடேஷ்வரன், உதவி இயக்குநர் மஞ்சுளா ஆகியோர் கலந்து கொண்டனர்.
News November 4, 2025
விழுப்புரம்: பட்டா, சிட்டா விவரங்களை பார்ப்பது எப்படி?

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் இணையதளத்திற்கு eservices.tn.gov.in/eservicesnew/index செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். அதில் மாவட்டம், வட்டம், கிராமம் பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான். (SHARE IT)


