News March 30, 2025

நீட் தேர்வு பயத்தினால் மாணவி தற்கொலை

image

திருவண்ணாமலை ,வந்தவாசி அருகே ராயனந்தல் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் – தேவி தம்பதியர், தற்போது குடும்பத்துடன் செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களது மகள் தேவதர்ஷினி நேற்று நீட் தேர்வு பயத்தினால் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த மாணவிக்கு பெற்றோருக்கு ரூபாய் 25 லட்சம் இழப்பீடாக கொடுக்க பாமாக அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Similar News

News January 26, 2026

தி.மலையில் கரண்ட் கட் ?

image

தண்டராம்பட்டு துணை மின்நிலையத்தில் நாளை (ஜன.27) மாதாந்திர பராமரிப்பு பணி மற்றும் பழுது நீக்கும் பணிகள் மேற்கொள்ள உள்ளனர். இந்த பணி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தண்டராம்பட்டு, கொளமஞ்சனூர். நாளாள்பள்ளம், அமந்தபுத்தூர், தென்முடியனூர், நெல்லிக்குப்பம், ராதாபுரம், கீழ்வணக்கம்பாடி, அகரம், தாழனோடை, அல்லப்பனூர், சாத்தனூர் மேலும் பல பகுதிகளில் மின் தடை ஏற்பட உள்ளது.

News January 26, 2026

தி.மலை: கூலி தொழிலாளி கொடூர பலி!

image

ஆரணியை அடுத்த நெசல் புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கன்னியப்பன் மாடுகளை மேய்த்து கூலி வேலை செய்து வந்துள்ளார். நேற்று (ஜன.25) மாடுகள் மேய்த்து கொண்டிருக்க போது ஒரு மாடு கன்னியப்பனை முட்டியது இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதையடுத்து ஆரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து கன்னியப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News January 26, 2026

ஆரணி: மாட்டு சண்டையை தடுக்க சென்றவர் பலி!

image

ஆரணி அருகே நெசல் புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன் (62) இவர் ஆரணி அமிர்தராஜ் என்பவரின் மாட்டுப் பண்ணையில் மாடுகளை மேய்க்கும் போது, மாடுகள் ஒன்றுடன் ஒன்று சண்டை போட்டு மோதிக்கொண்டது. மாடுகளை கட்டுப்படுத்த சென்ற கன்னியப்பனை மாடுகள் முட்டி மோதியதில், கன்னியப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து ஆரணி கிராமிய காவல் நிலைய போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!