News June 6, 2024
நீட் தேர்வில் பெரம்பலூர் மாணவர்கள் சாதனை
பெரம்பலூர் அருகே தனியார் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் சாதனை படைத்துள்ளனர். கடந்த ஜூன் 4 அன்று நீட் தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து அப்பள்ளி மாணவர் முகுந்தன் 635 மதிப்பெண்களும்ம், மாணவி நவீனா 566 மதிப்பெண்களும் பெற்றும் சாதனைப் படைத்துள்ளனர். இதையடுத்து கல்வி குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான வரதராஜன் உட்பட தாளாளர், ஆசிரியர்கள் என அனைவரும் தங்கள் வாழத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News November 20, 2024
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
பெரம்பலூர் மாவட்டத்தில் கலைஞர் கடன் உதவி திட்டத்தின் கீழ் குரு தொழில் உற்பத்தி நிறுவனங்களுக்கு நடைமுறை மற்றும் மூலதன கடன்கள் வழங்கப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு பெரம்பலூர் எளம்பலூர் ரோடு முருகன் கோவில் அருகில் தாய்கோ வங்கி கிளை மேலாளரை நேரிலோ அல்லது 9344159168, 04328 275633 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயனடையுமாறு கலெக்டர் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.
News November 20, 2024
பெரம்பலூர்: “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டம்
“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் பெரம்பலூர் வட்டம், வேலூர் ஊராட்சியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. அரசின் நலத்திட்டங்கள் பொதுமக்களுக்கு சென்றடைவதை உறுதி செய்தல் குறித்து நியாவிலைக்கடை, குழந்தைகள் மையம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கள ஆய்வினை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் மேற்கொண்டார்.
News November 20, 2024
விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்
பெரம்பலூர் ஆதிதிராவிடர் நலத்துறையில் 2024 – 25 ஆம் ஆண்டிற்கு, டாக்டர் அம்பேத்கர் பெயரில் பட்டியல் இன முன்னேற்றத்திற்கு தொண்டாற்றி வருபவர்களுக்கு, டாக்டர் அம்பேத்கர் விருது ஜனவரி 2025 இல் திருவள்ளுவர் தினத்தன்று வழங்கப்பட உள்ளது. பட்டியல் இனத்தவருக்கு அரிய தொண்டாற்றி வரும் தமிழறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர்கள் போன்ற நபர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார். SHAREIT