News February 6, 2025
நீடாமங்கலம்: காலை சிற்றுண்டியில் கிடந்த பல்லி

நீடாமங்கலம் ஒன்றியம், நரசிங்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இன்று (பிப்.6) காலை மாணவ, மாணவியர்கள் 14 பேருக்கு காலை சிற்றுண்டியாக பொங்கல், சாம்பார் வழங்கப்பட்டது. அப்போது பொங்கலில் பல்லி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த தலைமையாசிரியர் மாணவர்களை நீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். இந்நிலையில் கலெக்டர் மோகனசந்திரன் நேரில் சென்று மாணவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
Similar News
News September 16, 2025
மன்னார்குடியில் திருவிழா நிறைவு

மன்னார்குடி உப்புக்கார தெருவில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் கோவிலில் ஆவணி திருவிழா நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு தினந்தோறும் இரவு சுவாமி வீதி உலா நடைபெற்ற நிலையில், விழாவின் நிறைவாக நேற்று இரவு யானை வாகனத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது. கோவிலில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா வந்த அம்மனை பக்தர்கள் ஏரளாமானோர் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
News September 16, 2025
திருவாரூர்: ரூ.35,000 சம்பளத்தில் ரயில்வே வேலை

இந்திய ரயில்வேயில் வேலை பார்க்க ஆசை இருக்கா? அப்போ இந்த வாய்ப்பு உங்களுக்கு தான்!
⏩நிறுவனம்: இந்திய ரயில்வே
⏩பணி: Section Controller
⏩காலியிடங்கள்: 368
⏩சம்பளம்: ரூ.35,400
⏩வயது வரம்பு: 20 – 33
⏩கல்வி தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
⏩ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
⏩கடைசி தேதி: 14.10.2025
⏩ இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News September 16, 2025
திருவாரூர்: கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.18,000 நிதியுதவி

தமிழக அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களின் நலன் கருதி, ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி’ எனும் அருமையான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு 3 தவணைகளாக ரூ.14,000 நிதியுதவியும், ரூ.4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படுகிறது. திட்டத்தில் பயன்பெற விரும்பும் கர்ப்பிணிகள்<