News October 16, 2025
நீச்சல் போட்டியில் அசத்தல்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாநில அளவில் கல்லூரி மாணவர்களுக்கான நீச்சல் போட்டி, வேளச்சேரியில் நடைபெற்று வந்தது. இதன் இறுதிப் போட்டி நேற்று (அக்.14) நடந்த நிலையில் செங்கல்பட்டைச் சேர்ந்த நிதிக் நாதெல்லா 100 மீட்டர் பேக் ஸ்டோர்க் போட்டி, கவீன்ராஜ் 200 மீட்டர் பட்டர்பிளை போட்டி, யாதேஷ்பாபு 100 மீட்டர் பிரஸ்ட் ஸ்டோர்க் போட்டியில் முதலிடம் பெற்று பதக்கங்களை வென்றனர்.
Similar News
News October 15, 2025
செங்கல்பட்டு: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, காவல்துறை இன்று இரவு ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு, மாமல்லபுரம், மற்றும் மதுராந்தகம் ஆகிய மூன்று வட்டங்களுக்குட்பட்ட ஒன்பது காவல் நிலையங்களில், துணை காவல் கண்காணிப்பாளர் (DSP) தலைமையில் காவல்துறையினர் ரோந்து செல்லவுள்ளனர்.
News October 15, 2025
காட்டாங்குளத்தூரில் இருந்து சிறப்பு ரயில்கள்!

தீபாவளி விடுமுறையை ஒட்டி வருகின்ற 22-ம் தேதி காட்டாங்குளத்தூரில் இருந்து அதிகாலை 4, 4.30, 5, 5.35, 6.39 மணி ஆகிய நேரங்களில் புறப்படும் பயணிகள் சிறப்பு ரெயில்கள் தாம்பரத்தை சென்றடையும். இந்த சிறப்பு ரெயில்கள் பொத்தேரி, கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், வண்டலூர், பெருங்களத்தூர் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
News October 15, 2025
தாம்பரம் கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில்!

தாம்பரம் – கன்னியாகுமரி இடையே வரும் அக்.16 மற்றும் 18-ந்தேதி இரவு 11.30 மணிக்கு (வண்டி எண்-06133) 14 முன்பதிவு இல்லா பெட்டிகள் மற்றும் 6 முன்பதிவு பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மறுமார்கமாக அக்.17-ந்தேதி மாலை 4.35 மணிக்கு (வண்டி எண்-06134) கன்னியாகுமரி – செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. விரைவில் இதற்கான முன்பதிவு தொடங்க உள்ளது.