News December 31, 2025

நீங்க என்ன Resolution எடுக்க போறீங்க?

image

இந்த வருஷம் போயிடுச்சு, ஆனா அடுத்த வருஷம் கண்டிப்பா Comeback கொடுத்தே ஆகணும் என ஒவ்வொரு புத்தாண்டிலும் ஏதாவது ஒரு Resolution-ஐ எடுப்போம். அதை Follow பண்றோமோ இல்லையோ, கண்டிப்பாக ஏதோ ஒரு Resolution-ஐ எடுத்தே தீருவோம். அப்படி நாம எல்லோரும் பொதுவா எடுக்கும் சில Resolution-களை மேலே பட்டியலிட்டுள்ளோம். நீங்க இந்த வருஷம் எடுக்குற Resolution என்ன.. மறக்காம கமெண்ட் பண்ணுங்க?

Similar News

News December 31, 2025

BREAKING: 2026-ன் முதல் ஜல்லிக்கட்டு போட்டி

image

தமிழக மக்கள் மிக மகிழ்ச்சியுடனும் ஆரவாரத்துடனும் கொண்டாடும் போட்டி என்றால், ஜல்லிக்கட்டுதான். இந்நிலையில், 2026-ன் முதல் ஜல்லிக்கட்டு போட்டி ஜன.3-ம் தேதி புதுக்கோட்டை, தச்சங்குறிச்சி கிராமத்தில் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. புனித விண்ணேற்பு அன்னை ஆலய புத்தாண்டு மற்றும் அந்தோணியார் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது.

News December 31, 2025

எவ்வளவு குடிச்சா போலீஸ்கிட்ட மாட்டாம தப்பிக்கலாம்?

image

ஒரு பீர் அடிச்சா போலீஸ் பிடித்தாலும் கண்டுபிடிக்க முடியாது என நினைக்கும் நபரா நீங்கள்? அது முற்றிலும் தவறு, உங்க உடம்புல கொஞ்சமா ஆல்கஹால் கலந்தாலும் போலீஸ் சோதனையில்(Alcohol reading metre) நிச்சயம் தெரிந்துவிடும். போலீஸ் வைத்துள்ள மெஷினில் 35 புள்ளிகள் காட்டினால் நீங்கள் மது அருந்தியவர் என்பதை அவர்கள் உறுதி செய்துவிடுவர். எனவே மது ஒரு சொட்டு குடித்தாலும் வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பதே சிறந்தது..

News December 31, 2025

ஒருவருக்கு ₹13.48 கோடி சம்பளம் வழங்கும் OpenAI!

image

உலகிலேயே டெக் ஸ்டார்ட்அப்களில் அதிக சம்பளம் வழங்கும் நிறுவனமாக OpenAI உள்ளதாக The Wall Street Journal தெரிவித்துள்ளது. அந்நிறுவனத்தில் மொத்தம் 4,000 பேர் வேலை செய்யும் நிலையில், பங்குகள் அடிப்படையில் ஊழியர்களுக்கு சராசரியாக ₹13.48 கோடி சம்பளம் வழங்கப்படுகிறது. உலகின் 18 பெரிய டெக் நிறுவனங்கள் IPO வெளியிடுவதற்கு முன் வழங்கும் சராசரி ஊதியத்தை விட இது 34 மடங்கு அதிகமாகும்.

error: Content is protected !!