News September 27, 2024
நீங்க அன்னூரா, ஜாக்கிரதையா இருங்க

அன்னூர் முதல், கரியாம்பாளையம் பகுதிக்கு உட்பட்ட எல்லப்பாளையம் -துணை மின் நிலைய வளாகத்தில், இன்று மூன்று அடி உயரம் கொண்ட சிறுத்தை புகுந்துள்ளதாகவும், தற்போது இருள் சூழ்ந்துள்ளதால் அவை எங்கு உள்ளது என தென்படவில்லை எனவும் இந்த பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள் இரவு நேரங்களில் இன்று வெளிவருவதை தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
Similar News
News September 18, 2025
கோவையில் கொடூரக் கொலை: அதிரடி கைது!

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரத்தில் கடந்த மாதம் 27ஆம் தேதி, யாசகர் ஒருவர் மரக்கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த ஆர்.எஸ்.புரம் போலீசார், விசாரணை மேற்கொண்டதில், இறந்தவர் சீனிவாசன் என்பதும், மற்றொரு யாசகர் வேல்முருகன், அவரை கொலை செய்துவிட்டு தப்பி சென்றதும் தெரிய வந்தது. இதனையடுத்து கோவையில் பதுங்கி இருந்த வேல்முருகனை, நேற்று ஆர்.எஸ்.புரம் போலீசார் கைது செய்தனர்.
News September 18, 2025
கோவையில் ட்ரெண்டாகும் AI புகைப்படம் எச்சரிக்கை!

கோவை மாநகர காவல்துறை தனது முகநூல் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “Google Gemini” பெயரில் வைரலாகும் “Nano Banana AI” ட்ரெண்ட் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி போலியான இணையதளம், செயலிகள் மூலம் புகைப்படம், தனிப்பட்ட விவரங்கள் பதிவேற்றினால், வங்கி கணக்கு போன்ற தனிநபர் தகவல்கள் திருடப்படலாம் என, கோவை மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது.
News September 18, 2025
கோவையில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்

கோவையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, இன்று (செப்.18) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, சிட்கோ, சுந்தராபுரம், போத்தனூர், ஈச்சனாரி, குறிச்சி, எல்.ஐ.சி காலனி, குறிச்சி ஹவுசிங் யூனிட், மலுமிச்சம்பட்டி ஒரு பகுதி, சீரநாயக்கன்பாளையம், பாப்பநாயக்கன்புதூர், வடவள்ளி, வேடபட்டி, வீரகேரளம், தெலுங்குபாளையம், வேலாண்டிபாளையம், சாய்பாபா காலனி, சுண்டப்பாளையம் ஒரு பகுதி, ஆகிய பகுதிகள் மின் வினியோகம் இருக்காது.