News December 22, 2025
நீங்காத துயரை கொடுத்த 2025!

2025 இந்தியாவிற்கு மறக்க முடியாத துயரங்களையே கொடுத்து சென்றுள்ளது. அகமதாபாத் விமான விபத்தும், கரூர், திருப்பதி, டெல்லி ரயில் நிலையம், பெங்களூரு போன்ற கூட்ட நெரிசல்களிலும் சிக்கி பல இன்னுயிர்களை இந்த ஆண்டு இழந்துவிட்டோம். அதேபோல, கோவா கிளப் விபத்து, பஹல்காம் தாக்குதல் போன்றவற்றின் தாக்கமும் இன்னும் மக்கள் மனதில் இருந்து மறையவில்லை. இவற்றுடன் இயற்கையும் மேக வெடிப்பாக, மழையாக பலரை கொன்றது.
Similar News
News December 26, 2025
காஞ்சியில் நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…

காஞ்சிபுரத்தில் நாளை டிசம்பர் 27 மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நுறி வழிகாட்டு மையம் மற்றும் மகளிர் திட்டம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் காலை 9:00 மணி முதல் தொடங்கி நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் தங்களின் சுய விவரங்களுடன் நேரடியாக முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு இந்த 044-27237124 அழைக்கலாம்.
News December 26, 2025
BREAKING: அதிமுகவில் இருந்து கூண்டோடு நீக்கம்

அதிமுகவில் இருந்து 3 நிர்வாகிகளை அதிரடியாக நீக்கி EPS அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன்படி, வடசென்னை நிர்வாகிகள் லண்டன் வெங்கடேஷ், விசுவாசி, கலையரசு ஆகியோர் கட்சி விதிகளை மீறி செயல்பட்டதால், அவர்களை அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக அவர் தெரிவித்துள்ளார். இவர்களுடன் கட்சியினர் யாரும் தொடர்பு வைக்க வேண்டாம் எனவும் EPS அறிவுறுத்தியுள்ளார்.
News December 26, 2025
சுழல் பார்வையில் மூழ்கடிக்கும் பிரியா

பிரியா பவானி ஷங்கர், கிறிஸ்துமஸ் கொண்டாட்ட போட்டோஸை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இதில், சிவப்பு ரோஜா போல் அழகாக இருக்கிறார். அவரது அழகாக சிரிப்பில், உள்ளம் கொள்ளை போகுது. மனமோ, இந்த பெண் போல், அழகான தேவை பூவுலகில் உண்டா என்று ஆர்ப்பரிக்கிறது. இந்த போட்டோஸ், உங்களுக்கும் பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.


