News November 23, 2025
நீங்கள் சமர்பித்த SIR படிவத்தின் நிலையை அறிய வேண்டுமா?

வாக்காளர்கள் சமர்ப்பிக்கும் SIR படிவங்களை BLO மொபைல் செயலியில் பதிவேற்றம் செய்துள்ளார்களா என்பதை voters.eci.gov.in என்ற இணையதளத்தில் எளிதாக அறிந்து கொள்ளலாம். இதில் உள்ள ‘Fill Enumeration Form’ என்ற லிங்கை பயனர்கள் கிளிக் செய்து Login செய்யவேண்டும். பின்னர் வாக்காளர் அடையாள எண்ணை பதிவு செய்த பிறகு, உங்கள் SIR படிவம் ஏற்கெனவே சமர்பிக்கப்பட்டது என வந்தால், சரியாக சென்று சேர்ந்துவிட்டது என அர்த்தம்.
Similar News
News November 23, 2025
இந்த Browser-ல் விளம்பரங்களே வராது!

கூகுள் குரோமுக்கு போட்டியாக Perplexity நிறுவனம் Comet பிரவுசரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் பல சிறப்பம்சங்கள் உள்ளன. அதாவது, இதில் நீங்கள் பல Tab-களை Open செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் தேடும் அனைத்தும் ஒரே Tab-ல் சம்மரியாக கொடுக்கும் ‘Cross-Tab Summaries’ வசதி இதில் உள்ளது. இதில் ‘Ad Blocker’ இருப்பதால் விளம்பரம் வராது. இந்த பிரவுசர் ஆண்ட்ராய்டு யூசர்களுக்கு மட்டுமே கிடைக்கும். SHARE.
News November 23, 2025
21 மாவட்டங்களில் மழை வெளுக்கும்

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்த நிலையில், அடுத்த 2 மணி நேரத்திற்கு 21 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD எச்சரித்துள்ளது. அரியலூர், செங்கல்பட்டு, கடலூர், தருமபுரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சி, குமரி, மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், தூத்துக்குடி, நெல்லை, திருப்பத்தூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
News November 23, 2025
ஈரோடு தமிழன்பன் உடலுக்கு காவல்துறை மரியாதை

பன்முக வித்தகர் ஈரோடு தமிழன்பன் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அவரது தமிழ் தொண்டினை கௌரவிக்கும் விதமாக போலீஸ் மரியாதை அளிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். சென்னை அரும்பாக்கத்தில் அமைந்துள்ள மின் இடுகாட்டில் இன்று (நவ.23) அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


