News November 3, 2025
நீங்கள் இறந்தது போன்ற கனவு வருகிறதா?

தூங்கும் போது நீங்கள் இறப்பது போல் கனவுகள் வந்தால் அச்சம் வேண்டாம். நாம் ஏதோ ஒன்றை புதிதாக செய்யப் போகிறோம், நம்மிடம் இருந்து எதையோ நிறுத்திவிட்டு புதிய மனிதராக வாழப் போகிறோம் என்பதுதான். இந்த கனவுக்கு அர்த்தமாம். நடக்க இருக்கும் மாற்றத்தை உணர்த்தும் வகையிலே இதுபோன்ற கனவுகள் வருகிறதாம். அதனால் பயம் வேண்டாம். மாற்றம் நல்லதுக்கு தான் என்று நம்புங்கள். நல்லதே நடக்கும்.
Similar News
News November 3, 2025
அனைத்து மாவட்டத்திற்கும் HAPPY NEWS

தாயுமானவர் திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு இன்று முதல் வீடு தேடி ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்படவுள்ளன. மூத்த குடிமக்களுக்கான வயது 70-ல் இருந்து 65-ஆக தளர்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் முதல் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வடகிழக்கு பருவமழையை கருத்தில் கொண்டு, நவ.3 – 6-ம் தேதி வரை வழங்குவதாக TN அரசு அறிவித்துள்ளது.
News November 3, 2025
தென்னாப்பிரிக்காவை விடாத சோகம்!

உலகக்கோப்பையை வெல்ல முடியாத தென்னாப்பிரிக்காவின் சோகம் தொடருகிறது. 2023 & 2024 மகளிர் T20 WC, 2024 ஆண்கள் T20 WC, 2025 மகளிர் ODI என கோப்பை கனவை 4 முறை நெருங்கிய போதும், ஏமாற்றமே மிஞ்சியது. இதில் இருமுறை(2024 ஆண்கள் T20 WC & 2025 மகளிர் ODI) இந்தியா அந்த கனவை உடைத்தது. இந்த ஆண்டு நடைபெற்ற WTC கோப்பையை மட்டும் தென்னாப்பிரிக்கா வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. என்ன பண்றது சோகமா தான் இருக்கு!
News November 3, 2025
ஒரு பூத்திலும் RJD வெல்லக் கூடாது என காங்., திட்டம்: மோடி

பிஹாரில் பரப்புரை செய்த PM மோடி, ஒரு குடும்பம் (RJD ) மாநிலத்திலேயே அதிக ஊழல் செய்த குடும்பம்; மற்றொரு குடும்பம் (காங்.,) நாட்டிலேயே அதிக ஊழல் செய்த குடும்பம் என்று கடுமையாக சாடினார். CM வேட்பாளரில் காங்கிரஸுக்கு உடன்பாடு ஏற்படவில்லை; இதனால், RJD காங்கிரஸுக்கு பாடம் கற்பிக்க முடிவு செய்துள்ளது. அதேபோல் எந்த பூத்திலும் RJD வெல்லக்கூடாது என காங்., முடிவு செய்துள்ளதாகவும் விமர்சித்தார்.


