News December 27, 2025

‘நீங்களும் CM தான்’.. விஜய்யின் தாய் ஷோபா சூசகம்

image

‘ஜனநாயகன்’ படத்தின் ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சியில் ‘கோடம்பாக்கம் ஏரியா’ பாடலை விஜய்யின் தாயார் ஷோபா பாடியபோது சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது. அந்த பாடலில் வரும் ‘ஏழைங்க பாழைங்க நெனச்சிப்புட்டா, நாளைக்கு நீங்களும் CM தான்’ என்ற வரிகளை அவர் பாடினார். அப்போது, அங்கிருந்த விஜய் சிரிப்புடன் ஒரு ரியாக்சன் கொடுத்தார். SM-ல் பரவி வரும் இந்த வீடியோவுக்கு விஜய் ரசிகர்கள் ஹார்ட்டினை பறக்கவிட்டு வருகின்றனர்.

Similar News

News December 31, 2025

கூட்டணிகள் சங்கடப்படுத்த வேண்டாம்: செல்வப்பெருந்தகை

image

காங்., உள்கட்சி பிரச்னையில் கூட்டணி கட்சிகள் தலையிட வேண்டாம் என மாணிக்கம் தாகூர் தெரிவித்த கருத்துக்கு செல்வப்பெருந்தகை ஆதரவு தெரிவித்துள்ளார். தேவையற்ற சங்கடங்களை தோழமை கட்சிகள் ஏற்படுத்த வேண்டாம் என கோரிக்கை வைத்த அவர், இதனால் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம் இருப்பதாக நினைக்கவேண்டாம் எனவும் விளக்கமளித்துள்ளார். மேலும், மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டணி வலிமையாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.

News December 31, 2025

12 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகள்.. ருத்ரதாண்டவம் ஆடிய சர்பராஸ்

image

விஜய் ஹசாரே தொடரில், கோவா அணிக்கு எதிரான மேட்ச்சில் மும்பை வீரர் சர்பராஸ் கான் ருத்ரதாண்டவம் ஆடியுள்ளார். வெறும் 75 பந்துகளில் 157 ரன்களை குவித்து மலைக்க வைத்துள்ளார். அவரது இன்னிங்ஸில் 12 சிக்ஸர்களும், 9 பவுண்டரிகளும் அடங்கும். 56 பந்துகளில் சதமடித்த அவர், அடுத்த 19 பந்துகளில் 57 ரன்களை விளாசி மிரட்டி இருக்கிறார். இந்த போட்டியில் மும்பை அணி, 50 ஓவர்களில் 444/8 ரன்களை குவித்துள்ளது.

News December 31, 2025

சற்றுமுன்: செங்கோட்டையன் கொடுத்த அதிர்ச்சி

image

பொங்கலுக்கு முன் தவெகவில் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைவார்கள் என செங்கோட்டையன் கூறியிருந்தார். இதற்கான திரைமறைவு வேலைகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, கொங்கு மண்டலத்தை சேர்ந்த அதிமுக Ex MLA-க்களிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தகவல் லீக் ஆகியுள்ளது. இதனை ஸ்மெல் செய்த EPS தரப்பு அதிர்ச்சியில் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

error: Content is protected !!