News November 1, 2024
நீங்களும் பூங்கா பராமரிக்கலாம்: சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சியின் கீழ் உள்ள 871 பூங்காக்களில், 90 பூங்காக்கள் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளால் தத்தெடுக்கப்பட்டு நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. உங்களுக்கு மாநகராட்சி பூங்காக்களை பராமரிக்க ஆர்வம் உள்ளது என்றால், 9445190856 எண்ணை தொடர்பு கொண்டு பூங்காவை தத்தெடுத்து நல்ல முறையில் பராமரிக்கலாம் என சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க
Similar News
News September 12, 2025
BREAKING: சென்னை போத்தீஸ் கடைகளில் ரெய்டு

சென்னை கிழக்கு கடற்கரை சாலை (ஈசிஆர்) நீலாங்கரையில் உள்ள போத்தீஸ் உரிமையாளரின் கடை மற்றும் மகன்கள் போத்தி ராஜா மற்றும் அசோக் ஆகிய இருவரின் ஈசிஆர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருவர் வீட்டில் 6 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகளின் குழு என 2 மகன்கள் வீட்டில் 12 வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை சுமார் முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
News September 12, 2025
JUST IN: சென்னை மெட்ரோ பணி ஊழியர் உயிரிழப்பு

சிவகங்கையைச் சேர்ந்த ஜெபஜல்தின் என்பவர் சென்னையில் மெட்ரோ ரயில் பணியில் ஊழியராக பணியாற்றி வந்தார். சூளைமேடு அப்துல்லா தெருவில் உள்ள பி.ஜி.ஹாஸ்டலில் தங்கி வந்த அவர், நேற்று நள்ளிரவு மது போதையில் 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். தடுப்பு சுவர் இல்லாமை காரணமாக விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News September 12, 2025
சென்னையில் இன்று மின்தடை

சென்னையில் இன்று(செப்.12) மின்பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், பாலவாக்கம், காமராஜர் சாலை (ம) மெயின் ரோடு, பூந்தமல்லி, நசரத்தேபட்டை, மேப்பூர், திருமங்கலம் மெட்ரோ சோன், பாடிகுப்பம் மெயின் ரோடு, காமராஜ் நகர், பெரியார் நகர், 100 அடி சாலை, எழும்பூர், ஈவிகே சம்பத் சாலை, சிஎம்டிஏ, மெரினா டவர், திருவேங்கடம் தெரு உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.