News January 15, 2026
நிலவில் சொகுசு ஹோட்டல்!

அமெரிக்காவை சேர்ந்த GRU Space நிறுவனம், நிலவில் முதல் சொகுசு ஹோட்டலை அமைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் கட்டுமானத்தை 2029-ல் தொடங்கி, 2032-க்குள் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இந்த ஹோட்டலில் ஒருவர் தங்குவதற்கு (5 நாள்கள்) சுமார் ₹90 கோடி செலவாகும் என கூறப்படுகிறது. இதற்கான முன்பதிவுகளையும் அந்நிறுவனம் இப்போதே தொடங்கியுள்ளது. நிலவில் தங்குனா எப்படி இருக்கும்?
Similar News
News February 6, 2026
அரசியலுக்கு குட்பை சொல்கிறாரா திமுக அமைச்சர்?

உடல்நலக்குறைவால் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அரசியலில் இருந்து விலகப்போவதாக ஊடகங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. சொத்துக்குவிப்பு வழக்கு, ED நெருக்கடி என தவிக்கும் அவர், தனது வாரிசுகளை அரசியலுக்கு கொண்டுவர எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லையாம். எனவே தனது விசுவாசி ஒருவரை தலைமைக்கு அடையாளம் காட்டிவிட்டு அரசியலுக்கு குட்பை சொல்ல உள்ளாராம். ஆனால், இவை அனைத்தும் பொய் என அமைச்சரின் தரப்பு மறுக்கிறது.
News February 6, 2026
U19 WC: மகுடம் சூடுமா இந்தியா அணி

ஜிம்பாப்வேவில் நடக்கும் U19 உலகக் கோப்பை தொடரின் ஃபைனலில், இன்று இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இளம் படை பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் வலுவாக காணப்படுகிறது. அதேநேரத்தில் நடப்பு தொடரில் இங்கிலாந்தும் தோல்வியை தழுவாமல் ஃபைனலுக்கு முன்னேறியுள்ளது. எனவே, போட்டி கடுமையானதாக இருக்கும். போட்டியில் இந்தியா வென்றால் 6-வது முறையாக மகுடம் சூடும்.
News February 6, 2026
பிஹார் தேர்தல் செல்லாது: பிரசாந்த் கிஷோர்

பிஹார் தேர்தல் செல்லாது என அறிவிக்கக்கோரி ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். தேர்தலில் விதிகளை மீறி ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள பெண்ணுக்கும் தலா ₹10,000 வழங்கப்பட்டதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். எனவே, தேர்தல் நியாயமான நடைபெறவில்லை எனக் கூறி சட்டப்பேரவை தேர்தலை புதிதாக நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.


