News February 2, 2025
நிலம் தொடா்பான குறைதீா்வு கூட்டம்

மாவட்ட ஆட்சியர் சி.பழனி வெளியிட்ட செய்திக்குறிப்பு விழுப்புரம் மாவட்டத்தில் நிலம் தொடர்பான கோரிக்கை மனுக்களை, வரும் பிப்.7-ஆம் நடைபெறவுள்ள சிறப்பு குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் அளித்து பயன்பெறலாம். இக்கூட்டத்தில் பட்டா மாற்றம், நில ஒப்படை, இலவச வீட்டுமனைப் பட்டா, ஆக்கிரமிப்பு, நில அபகரிப்பு தொடர்பான மனுக்களைப் பொதுமக்கள் நேரிடையாக அளித்து பயன்பெறலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 6, 2026
விழுப்புரம் மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்டமன்ற 2026 பொது தேர்தலை முன்னிட்டு மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் நடைபெற்றது. ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், தலைமையில் நேற்று (05.03.2026) நடைபெற்ற இந்த கூட்டத்தில் தேர்தல் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.வி.சாய் பிரனீத் , மாவட்ட வருவாய் அலுவலர் .அரிதாஸ் உட்பட பலர் உடனிருந்தனர்.
News March 6, 2026
விழுப்புரத்தில் துடிதுடித்து பலி

விழுப்புரம் ரயில் நிலையத்தில் பணியிலிருந்த ஒப்பந்தத் தொழிலாளி ரா.மணிகண்டன்(38) புதுச்சேரி- மங்களூா் வாராந்திர விரைவு ரயிலை தண்ணீரால் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தாா் . அப்போது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட மணிகண்டன் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாா். அவரின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
News March 6, 2026
விழுப்புரம்: ராமதாஸின் திடீர் ஆலோசனை

திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நேற்று வியாழக்கிழமை அவரது ஆதரவாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் 2026 சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் திரளாக பாமக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


